
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அரபு அமீரகம் கோல்டன் விசா கொடுத்து கவுரவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபலமானவர்களுக்கு அரசு அமீரகம் கடந்த சில காலமாக கோல்டன் விசா என்னும் சிறப்பு விஐபி விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இதற்கு முன்பு சரத்குமார், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கியது. தற்போது உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Continue reading …
அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை செல்வதற்கு 3 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்று புனித யாத்திரை தொடங்கி உள்ளது. ஆண்டுதோறும் காஷ்மீரிலுள்ள அமர்நாத் குகைக்கோவிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க தரிசனம் செய்தவற்கு பல லட்சம் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா காரணமாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்லும் முதலாவது குழுவின் பயணத்தை காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா […]
Continue reading …
விண்ணில் பாய்கிறது PSLV C-53 என்ற ராக்கெட் 3 செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி 53ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராகிருப்பதாகவும், கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும் என்றும் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் இருப்பதாகவும் […]
Continue reading …
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிடில் அபராதம் இருமடங்காக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதார் மற்றும் பான் எண் இரண்டையும் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இன்றுக்குள் இரண்டையும் இணைக்காதவர்கள் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளது. இந்த இரண்டையும் இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதன் பின்னர் இணைக்கப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 500 ரூபாய் அபராதத்துடன் ஆதார் […]
Continue reading …
தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான பிரச்னை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியிருப்பதாக ஈபிஎஸ் தனது மனுவில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களும் உள்ளன. இக்கட்டிடம் ரூ.110 கோடியில் 7 அடுக்கு மாடித் தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
Continue reading …
சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து சுமார் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள திரைப்படம் “விக்ரம்”. உலகம் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் ஹாட்ஸ்டார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன் விஜய் சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான “விக்ரம்” […]
Continue reading …
நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். அவரது உடலுக்கு ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாகவே நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்ய தாமதமாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்ட வித்யாசாகர் […]
Continue reading …
சொகுசு பஸ் ஒன்று தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொகுசு பஸ் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு நேற்று இரவு புறப்பட்டு ஒட்டாப்பிடாரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன்புறத்திலிருந்து புகை அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு கூறியுள்ளார். பீதியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு […]
Continue reading …
தமிழகம் முழுதும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இனி முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலகங்களில் பணிக்கு வருபவர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
Continue reading …