
மத்திய அமைச்சரவையில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஏலத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. குறைந்த விலையில் அதிக விலை வரையிலான ஸ்மார்ட் போன்களை 4ஜி தொழில்நுட்பத்தில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. ஆன்லைன் சந்தைகளில் 5ஜி தொழில்நுட்பத்துடன் ஸ்மார்போன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) […]
Continue reading …
குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் […]
Continue reading …
எம்.பி. ஜோதிமணி ராகுல் காந்தியை விசாரிக்கக்கூடாது என்று கூறி போராட்டம் செய்தததால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் கடந்த இரண்டு நாட்களாக நேஷனல் ஹெரால்டு வழக்கு சம்பந்தமாக அமலாக்கத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நேற்று 8.30 மணி நேரம் நடத்திய விசாரணை இன்றும் தொடர்ந்துள்ளது. இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகம் பலத்த காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியை விசாரிப்பதை எதிர்த்து எம்.பி. […]
Continue reading …
திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாக தன் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குதான் என்று கூறியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவரை அதிமுக ஒற்றை தலைமையில் செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு சசிகலா அந்த பதவியை ஏற்றாலும் பின்னர் அவர் சிறை சென்றார். அதன்பின் கட்சிக்கு பொதுச்செயலாளர் இல்லாமல் ஈபிஎஸ் […]
Continue reading …
கல்வித்துறை நடத்திய ஆய்வில் கொரோனா நொய் தொற்று காலத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக அளித்துள்ள தகவல் அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு நீடித்து வருகிறது. கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கடும் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த சமயம் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளும் முழுவதுமாக மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் […]
Continue reading …
13ம் தேதி முதல் ரேசன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் செயல்படுவதை […]
Continue reading …
ராயல் என்பீல்ட் பைக் ஒன்று சென்னையில் இன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் ராயல் என்பீல்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டியிலிருந்து புகை வந்ததால் அவர் வண்டியை விட்டு கீழிறங்கினார். அப்போது உடனே வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து இளைஞரும் உடனிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அருகே இருந்த ஹோட்டலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வாகனம் […]
Continue reading …
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக விளங்கியவர் மிதாலி ராஜ். தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இதுவரை 12 டெஸ்ட், 89-டி-20, 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் இவர், டெஸ்ட் போட்டியில் 699 ரன்களும், ஒரு நாள் போட்டிகளி 7,805 ரன்களும், டி-20 போட்டிகளில் 2364 […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார், நடிகர் சூர்யாவுக்கு கார், துணை இயக்குனர்களுக்கு இரு சக்கர வாகனம் என்று உலகநாயகன் கமலஹாசன் பரிசுகளை வழங்கி வருகிறார். ஜூன் 3ம் தேதி வெளியாக அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “விக்ரம்.” இத்திரைப்படம் பேன் இந்தியா அனைத்து ரசிகர்களிடமும் பேசப்பட்டு வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. 5 நாட்களில் உலகளவில் 250 கோடி வசூலை எட்டியுள்ளது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் குஷியான கமல்ஹாசன் படக்குழுவினருக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். இயக்குனர் […]
Continue reading …
40 சதவீதம் மக்கள் தொகையை சீனா ஒவ்வொரு தலைமுறையிலும் இழக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பணக்காரர்களின் முக்கியமான எலான் மஸ்க் வெளியிடும் பல அறிக்கைகள் விவகாரமாகவே அமைகிறது. அவ்வகையில் மக்கள் தொகை பற்றிய அவரது கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவகிறது. அதை கட்டுப்படுத்த பலரும் பேசி வரும் நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயல்வது மக்கள்தொகை வீழ்ச்சியோடு நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். […]
Continue reading …