Home » Entries posted by Shankar U (Page 524)
Entries posted by Shankar

குடிமகனை புரட்டி எடுத்த பெண்!

Comments Off on குடிமகனை புரட்டி எடுத்த பெண்!

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் தொல்லை கொடுத்தவரை அப்பெண் நடுரோட்டில் புரட்டி எடுத்த சம்பவம் நடந்தேறி உள்ளது. கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் பனமாரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவர் வெங்கபள்ளி நோக்கி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அருகில் இருந்த இருக்கையில் இருந்த நபர் சந்தியாவிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சந்தியா அவரை வேறு சீட்டில் அமருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் சந்தியா சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் மறுபடியும் அதே சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். சக பயணிகள் […]

Continue reading …

ஈராக்கில் மர்ம காய்ச்சல்!

Comments Off on ஈராக்கில் மர்ம காய்ச்சல்!

ஈராக்கில் புது விதமாக மூக்கில் ரத்தம் வரவழைக்கும் வகையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வித்தியாசமான நோய்கள் பரவி மக்களை பீதியடைய வைக்கிறது. இந்நிலையில் ஈராக்கில் பரவ தொடங்கியுள்ள மர்ம காய்ச்சல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போதுதான் நாம் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். அவ்வபோது பல்வேறு நோய்கள் திடீரென பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில் அவ்வாறாக ஐரோப்பிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள குரங்கு […]

Continue reading …

ஹெச்டிஎப்சியின் புதிய கிளைகள்!

Comments Off on ஹெச்டிஎப்சியின் புதிய கிளைகள்!

இந்தியாவில் “6000 புதிய கிளைகளை திறக்க திட்டம்“ ஹெச்டிஎப்சி வங்கி திறப்பதாக தெரிவித்துள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி சுமார் 6000 கிளைகள் திறப்பது தங்களின் இலக்கு என தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீனிவாசன், “நாங்கள் எங்கள் இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு 730 புதிய கிளைகள் திறந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 2000 கிளைகள் திறக்கும் எண்ணம் […]

Continue reading …

130 கோடி மக்களின் சேவகன்!

Comments Off on 130 கோடி மக்களின் சேவகன்!

தன்னை ஒரு பிரதமராக என்றுமே கருதியதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக நேற்று முதல் ஜூன் 14ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று இமாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிசான் திட்டத்தின் கீழ் நிதியை விடுவித்து பேசிய பிரதமர் மோடி “இன்று இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உலக அளவில் பேசப்படுகிறது. உலக வங்கியே இந்தியா குறித்து […]

Continue reading …

எஸ்.டி.ஆரின் திரைப்படம் ரூ.117 கோடி வசூல்!

Comments Off on எஸ்.டி.ஆரின் திரைப்படம் ரூ.117 கோடி வசூல்!

ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் “மாநாடு”. சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இருவரின் கூட்டணி உருவான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கினார். சுரேஷ் காமாட்சி தயாரித்தார். இத்திரைப்படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானது. வெளியான முதல் நாளிலே ரூ.9 கோடி வசூலித்தது. முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்தது. 25வது நாளில் ரூ.100 கோடிகளைக் கடந்தது. இவ்வாண்டின் துவக்கத்தில் 100வது நாளைக்கொண்டாடிய இப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இப்படத்தின் தயாரிப்பாளர் […]

Continue reading …

தொழிற்கல்வி பாடம் ரத்து!

Comments Off on தொழிற்கல்வி பாடம் ரத்து!

9 மற்றும் 10ம் வகுப்பிற்கான தொழில்கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டத்தை கடந்த அதிமுக ஆட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ, மாணவர்களும், தொழிற்கல்வி பாடத்திட்டம் தேவையில்லை என்று சில மாணவர்களும் கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில்கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Continue reading …

தமிழகம் யுபிஎஸ்சி தேர்வில் பின்னடைவு

Comments Off on தமிழகம் யுபிஎஸ்சி தேர்வில் பின்னடைவு

யுபிஎஸ்சி நடத்தும் ஐ.ஏஎஸ், ஐபிஎஸ்-2021ம் ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளிகி உள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தில் பின் தமிழகம் தங்கியுள்ளது. நேற்று யுபிஎஸ் சி நடத்தும் 2021ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்திய அளவில் சுமார் 685 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து 27 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் சனங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள். இத்தேர்வில் இந்திய அளவில் சுமார் 261 பேர் தேர்ச்சி […]

Continue reading …

முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்!

Comments Off on முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்!

அனைவரும் குரங்கு வைரஸ் நோய் வராமல் தடுக்க முன்னெசரிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் குரங்கு நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு குரங்கு அம்மைத் தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இத்தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் தொற்று எளிதில் ஏற்படாது எனினும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகினால் இந்த நோய் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. […]

Continue reading …

கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!

Comments Off on கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!
கல்லூரி விழாவில் முதலமைச்சர் பேச்சு!

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐ.டி. கல்லூரிக்கு “ஏ பிளஸ் பிளஸ்” சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கல்வி உரிமைதான் பெண்கள் உரிமை” என்று கூறியுள்ளார். மதச்சார்பின்மையின் மறு உருவம்தான் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி. எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு ஏபிளஸ்பிளஸ் தரச்சான்றிதழை கல்லூரி முதல்வரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மாணவிகள் மத்தியில் உரையாற்றிய போது, “பெண்களுக்கான கல்லூரியாக எஸ்.ஐ.இ.டி. கல்லூரி திகழ்கிறது. தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் நான் இந்த கல்லூரிக்கு வாக்களிக்க வருவேன். என்னுடைய வெற்றிக்கான வாக்கினை செலுத்திய […]

Continue reading …

இன்றுடன் முடிந்தது பத்தாம் வகுப்பு தேர்வுகள்!

Comments Off on இன்றுடன் முடிந்தது பத்தாம் வகுப்பு தேர்வுகள்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமலே அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இந்த வருடம் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடையும் என்றும், அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் […]

Continue reading …