Home » Entries posted by Shankar U (Page 530)
Entries posted by Shankar

போக்குவரத்து பாதுகாப்பின் விதிமுறைகள்

Comments Off on போக்குவரத்து பாதுகாப்பின் விதிமுறைகள்

போக்குவரத்து பாதுகாப்பு துறை ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துள்ளது. சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டு இந்த புதிய விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. நேற்று சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் பலர் மீது வழக்குப்பதிவு […]

Continue reading …

கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவேசம்!

Comments Off on கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவேசம்!

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து இந்து கோவில்கள் அருகே இஸ்லாமிய கடைகள் செயல்பட தடை விதிப்பது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பல பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா “நான் ஒரு இந்து, இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை மாட்டுக்கறி உண்ணக்கூடாது என சொல்ல […]

Continue reading …

ஹாலிவுட்டில் தனுஷூக்கு அங்கீகாரம்!

Comments Off on ஹாலிவுட்டில் தனுஷூக்கு அங்கீகாரம்!

“கிரே மேன்” திரைப்படம் விரைவில் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கிறது. “தி கிரே மேன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்ததுள்ளது. இத்திரைப்படம் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடையது. “இத்திரைப்படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார்” எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூன் 22ம் தேதி அத்திரைப்படம் ரிலீசாக […]

Continue reading …

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன் – விக்கி!

Comments Off on குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன் – விக்கி!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் சமீபத்தில் இருகுடும்பத்தினர் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில், இருவரும் எப்போது திருமணம் செய்யப் போகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது வரும் ஜூன் 9ம் தேதி நடிகை நயன் தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருப்பதியில் திருமணம் நடக்கவுள்ளதாக கூடுதல் தகவல் வெளியானது. இன்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் […]

Continue reading …

டான் திரைப்படம் ரூ.100 கோடி வசூலா?

Comments Off on டான் திரைப்படம் ரூ.100 கோடி வசூலா?

“டான்” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரூபாய் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தது. இந்நிநிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக கூறப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் […]

Continue reading …

மீண்டும் வொர்க் ப்ரம் ஹோமா?

Comments Off on மீண்டும் வொர்க் ப்ரம் ஹோமா?

பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் என்று அறிவித்துள்ளது. ஆம். உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று காலை கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அலுவலகம் செல்ல வேண்டியவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக சூறைக்காற்று காரணமாக மரங்கள் சாலையில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Continue reading …

ஏர்டெல் கட்டணம் மீண்டும் உயர்வா?

Comments Off on ஏர்டெல் கட்டணம் மீண்டும் உயர்வா?

ஏர்டெல்லின் கட்டண உயர்வால் பயனாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏர்டெல், ஜியோ உள்பட முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் பிரிபெய்டு கட்டணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் உயர்த்தியது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் மீண்டும் தனது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் வருவாயை 200 ரூபாய் என நிர்ணயம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Continue reading …

கல்குவாரிகளை ஆய்வுக்கு சிறப்பு குழு!

Comments Off on கல்குவாரிகளை ஆய்வுக்கு சிறப்பு குழு!
கல்குவாரிகளை ஆய்வுக்கு சிறப்பு குழு!

வெளி மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு சிறப்பு குழுக்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் பகுதியில் உள்ள தனியார் குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிவு ஏற்பட்டு குவாரிக்குள் விழுந்தது. இதில் 6 பேர் சிக்கி கொண்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க 8 நாட்கள் மீட்பு பணிகள் நடந்தன. இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்டப்பட்டனர். நேற்று இரவு […]

Continue reading …

மத்திய அரசு நாடகம், மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

Comments Off on மத்திய அரசு நாடகம், மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு

மக்கள் நீதி மய்யம் மத்திய அரசு எரிவாயு சிலிண்டர் மானியம் என்று அறிவித்து நாடகம் ஆடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த மானியம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மட்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்கு மட்டுமின்றி அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையை குறைத்தால் தான் […]

Continue reading …

தேனி மக்கள் மகிழ்ச்சி!

Comments Off on தேனி மக்கள் மகிழ்ச்சி!

தேனி மக்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதால் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுரையிலிருந்து தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டர்லைனாக செயல்பட்டு வந்த இந்த ரயில் சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்து வந்தன. தற்போது பல ஆண்டுகள் கழித்து இந்த வழிதடத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட […]

Continue reading …