Home » Entries posted by Shankar U (Page 531)
Entries posted by Shankar

குரங்கு வைரஸ் நோய் பரவல்!

Comments Off on குரங்கு வைரஸ் நோய் பரவல்!

குரங்கு வைரஸ் என்ற நோய் 12 நாடுகளைச் சேர்ந்த 92 பேருக்கு பரவி உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விலங்குகளைத் திண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவுவதாக கூறப்படுகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்குச் சென்று லண்டன் திருப்பிய நிலையில் அவருக்குக் குரங்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7 ஆம் தேதி அறிவித்தனர். இந்நோய் […]

Continue reading …

ஜவுளி உற்பத்தியாளர்கள் 2வது நாள் போராட்டம்

Comments Off on ஜவுளி உற்பத்தியாளர்கள் 2வது நாள் போராட்டம்

பின்னலாடை நிறுவனங்கள் நூல் விலை அதிகரித்துள்ள காரணத்தால் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக நூல் விலை 120 முதல் 150 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் நிலையில் நூலின் விலையை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தன. நூல் விலை உயர்வைக் கண்டித்து, ஜவுளி உற்பத்தியாளர்கள் 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர், கோவை, மாவட்டங்களில் நூல் விலை உயர்வை கண்டித்துக், ஜவுளி உற்பத்தியாளர்களின் 15 நாட்கள் வேலை நிறுத்த […]

Continue reading …

டிமான்டி காலனி இரண்டாம் பாகம்!

Comments Off on டிமான்டி காலனி இரண்டாம் பாகம்!

இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். மாபெரும் வெற்றி பெற்ற படம் டிமான்டி காலனி. கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. இப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உட்பட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்கும். அதில் வந்த கதாபாத்திரங்களும், […]

Continue reading …

வாட்ஸ் ஆப் சில ஐபோனுக்கு நிறுத்தமா?

Comments Off on வாட்ஸ் ஆப் சில ஐபோனுக்கு நிறுத்தமா?

மெட்டா நிறுவனம் சில ஐபோன் மாடல் போன்களுக்கு வாட்ஸ் ஆப் நிறுத்த முடிவு செய்துள்ளது. புதுப்பிக்கப்படாத மாடல்களில் வாட்ஸ் ஆப் விரைவில் நிறுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகும் என்பதால் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ் ஆப் இயங்குவதற்கான சப்போர்ட் நீக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது […]

Continue reading …

போக்குவரத்து காவல்துறையின் எச்சரிக்கை!

Comments Off on போக்குவரத்து காவல்துறையின் எச்சரிக்கை!

போக்குவரத்து காவல்துறை சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருவதாக […]

Continue reading …

விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு!

Comments Off on விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் பருவமழையால் குறைந்துள்ளது. இதனையடுத்து தக்காளியின் விலை தொடர்ந்து உயரத் தொடங்கி உள்ளது. டந்த மாதத்தில் ரூ.10 விற்று வந்த தக்காளில் வேகமாக விலை உயர்ந்து கிலோ ரூ.120-ஐ தொட்டது. தக்காளி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளரான அக்கீம் என்பவரின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு குண்டுவெடிக்கும் என்று நேற்றிரவு இரவு 11.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் போன் செய்துவிட்டு போனை துண்டித்துள்ளார். இதுகுறித்து தேனாம்பேட்டை காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே, போலீசார் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று அதிரடி சோதனை செய்தனர். அங்கு சந்தேகம் கொள்ளும்படியாக எந்தப் பொருட்களும் இல்லை. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த போன் நம்பரை வைத்து யார் போன் செய்து மிரட்டல் […]

Continue reading …

மேட்டூர் அணை மே 24ம் தேதி திறப்பு

Comments Off on மேட்டூர் அணை மே 24ம் தேதி திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் மே 24ம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார். அறிக்கையில் கூறியதாவது:& தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு, குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் […]

Continue reading …

மின்னல் தாக்கி 33 பேர் பலி

Comments Off on மின்னல் தாக்கி 33 பேர் பலி

பீகாரில் மின்னல் தாக்கியதில் 33 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தங்களது இரங்கல் தெரிவித்துள்ளனர். பீகாரில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையால் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் டுவிட்டரில் மக்கள் இறந்ததற்கு வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனது […]

Continue reading …

ஒமைக்ரான் BA4 அச்சம் வேண்டாம்

Comments Off on ஒமைக்ரான் BA4 அச்சம் வேண்டாம்

ஒமைக்கிரான் BA4 என்ற புதிய வகை வைரஸ் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் 7 நாட்களிலேயே குணமடைந்துள்ளார். சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “நாவலூரில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அம்மா மற்றும் மகளுக்கு 2 பேருக்கு மே 4ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் இரண்டு பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். ஒரே வீட்டில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்காக […]

Continue reading …