Home » Entries posted by Shankar U (Page 533)
Entries posted by Shankar

5 நாட்களுக்கு மழை!

Comments Off on 5 நாட்களுக்கு மழை!

5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

Continue reading …

பசுமை கடைகளில் தக்காளி விற்பனை

Comments Off on பசுமை கடைகளில் தக்காளி விற்பனை

தக்காளியின் விலை தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேட்டில் விலை ரூ.100க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் நேற்று தக்காளி விலை 20வது நாளாக அதிகரித்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி “வெளிச்சந்தைகளில் தக்காளில் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 […]

Continue reading …

அஜித்தின் ஜோடியாகிறார் மஞ்சு வாரியர்!

Comments Off on அஜித்தின் ஜோடியாகிறார் மஞ்சு வாரியர்!

அஜித்தின் அடுத்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் ஜோடியாகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.   வலிமை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த திரைப்படம் AK61. படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. பல […]

Continue reading …

இயக்குநர் ஷங்கர் அமலாக்க துறையிடம் ஆஜர்!

Comments Off on இயக்குநர் ஷங்கர் அமலாக்க துறையிடம் ஆஜர்!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் இயக்குனர் ஷங்கர் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஷங்கருக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக இயக்குனர் ஷங்கர் மீது பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானதாகவும், அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் […]

Continue reading …

எச்.ராஜா கைது?

Comments Off on எச்.ராஜா கைது?

ஹெச் ராஜா கைது செய்யப்பட்டதாக தகல்வகள் வெளியாகி உள்ளன. இன்று பழனியில் நடைபெற இருந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தார் பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா. இந்நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் அரசியல் தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரக்கூடாது என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி எச். ராஜா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்ததாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

பயோபிக் படம் எடுக்கவிருக்கும் வெற்றிமாறன்!

Comments Off on பயோபிக் படம் எடுக்கவிருக்கும் வெற்றிமாறன்!

வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் மிகவும் கவனமாக இருப்பதை பார்த்து நிறைய சினிமா தொழில்நுட்ப துறையினரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இவரது இயக்கத்தில் வெளியான “பொல்லாதவன்” திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து, “ஆடுகளம்” மற்றும் “வடசென்னை” போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. முதல் படம் முதலே வெற்றித்தர தொடங்கிய இந்த கூட்டணி, “பொல்லாதவன்” தொடங்கி “அசுரன்” வரை மெகாஹிட் திரைப்படங்களை தந்து வருகிறது. இதனால் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் […]

Continue reading …

கேன்ஸ் பட விழா! சிகப்பு கம்பள வரவேற்பு!

Comments Off on கேன்ஸ் பட விழா! சிகப்பு கம்பள வரவேற்பு!

தற்போது பிரான்ஸ் நாட்டில் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகெங்கிலுமிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், மாதவன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, நவாசுதின் சித்திக், ஊர்வசி ரவ்துலா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் “லே மஸ்க்“ திரைப்படம், மாதவன் இயக்கி […]

Continue reading …

கருப்புப் பெட்டியின் பகீர் தகவல்!

Comments Off on கருப்புப் பெட்டியின் பகீர் தகவல்!

கருப்பு பெட்டியை ஆராய்ந்தபோது திட்டமிட்டு விமான விபத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி குவாங்சி மாகாணத்தில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் சென்ற 132 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டிகளை கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க புலனாய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விமானத்தில் விபத்திற்கு முன் எந்த பழுதும் ஏற்படவில்லை என்றும், விமானத்தை இயக்கியவர்களில் யாரேனும் ஒருவர் […]

Continue reading …

பேருந்துகள் மோதிய விபத்தில் 40 பேர் படுகாயம்!

Comments Off on பேருந்துகள் மோதிய விபத்தில் 40 பேர் படுகாயம்!

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேராக மோதியதில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான கல்லூரி பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்த பின் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்தபோது, அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் […]

Continue reading …

பரீட்சை பேப்பரை ஜூன் 1 முதல் திருத்த துவங்கலாம்!

Comments Off on பரீட்சை பேப்பரை ஜூன் 1 முதல் திருத்த துவங்கலாம்!

விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதிய 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. 11 […]

Continue reading …