Home » Entries posted by Shankar U (Page 540)
Entries posted by Shankar

அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

Comments Off on அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

மிகப்பெரிய ஏரியான மீட் ஏரி அமேரிக்காவில் வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. அதில் மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய நீர் தேக்க ஏரியான மீட் ஏரி நாளுக்கு நாள் வறண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் கடந்த 2001ம் ஆண்டு முதல் வேகமாக வளற தொடங்கிய ஏரி தற்போது முற்றிலும் வற்றும் நிலையில் உள்ளது. ஆனால், ஏரியின் வறண்ட பகுதிகளிலிருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இரும்பு […]

Continue reading …

பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

Comments Off on பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு!

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் கோரிக்கைகளை வைத்துள்ளனர் பல சங்கத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. இதனையடுத்து, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தில் முந்தைய […]

Continue reading …

பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணமா?

Comments Off on பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணமா?

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது டி இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அதனை […]

Continue reading …

“தி கிரேட் இந்தியன் கிச்சன்”

Comments Off on “தி கிரேட் இந்தியன் கிச்சன்”

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாகிறது. ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் “யூஏ” சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் […]

Continue reading …

இசைஞானியின் இசைவிருந்து!

Comments Off on இசைஞானியின் இசைவிருந்து!

இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார். இதுவரை இசைஞானி இளையராஜா பல மொழிகளிலும் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பல சாதனைகள் படைத்துள்ள இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 2ம் தேதி தனது பிறந்த நாள் கொண்டாடுவார். எனவே இந்த ஆண்டு தனது பிறந்த நாள் அன்று கோவையில் இசைக்கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளார். இசை நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கங்கை அமரன் கவனித்து வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக […]

Continue reading …

நீலகிரிக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

Comments Off on நீலகிரிக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற மே 20, 21-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஊட்டியில் 20-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பாக பல நலத்திட்டங்களை வழங்கும் விழாவிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

Continue reading …

3 ஆயிரம் காவலர்கள் புதிதாக தேர்வு!

Comments Off on 3 ஆயிரம் காவலர்கள் புதிதாக தேர்வு!

தமிழகத்தில் விரைவில் 3 ஆயிரம் காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார். இதை தவிர மேலும் சில அறிக்கைகளும் வெளியிட்டுள்ளார். காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நிச்சயமாக கடைப்பிடிக்கப்படும். திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவில் ஆளுநர்களுக்கு 5% சிறப்பு சம்பளம் வழங்கப்படும். காவலர்களுக்கான நல மேம்பாட்டிற்க்காக மகிழ்ச்சி என்ற செயல்திட்டம் ரூ.53 லட்சத்தில் செயல்படுத்தப்படும். எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படக்கூடிய சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் அவர்கள் […]

Continue reading …

இலங்கை அதிபருக்கு கடும் எதிர்ப்பு

Comments Off on இலங்கை அதிபருக்கு கடும் எதிர்ப்பு

அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்த அவசர நிலை அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல வாரங்களாக நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களால் நெருக்கடி அதிகரித்து வருவதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே. அதிபரின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை அமைப்புகள், வக்கீல் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் […]

Continue reading …

ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Comments Off on ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ரூ.3கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சித்தூரில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ. 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை தமிழகத்தை சேர்ந்த 7 பேர் வெட்டியதாக ஆந்திரா காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 வாகனங்களையும் ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Continue reading …

புலிட்சர் விருது அறிவிப்பு

Comments Off on புலிட்சர் விருது அறிவிப்பு

2வது முறையாக டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது தரப்படுகிறது. இந்த வருடத்திற்கான புலிட்சர் விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவின்போது உலகம் கண்ட கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக ஃபீச்சர் புகைப்படங்கள் […]

Continue reading …