Home » Entries posted by Shankar U (Page 551)
Entries posted by Shankar

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!

Comments Off on விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறினார். ஏற்கனவே ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். தமிழக அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது இந்த அறிவிப்பில் இருந்து தெரியவருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Continue reading …

டுவிட்டரில் இருந்து வெளியேறிய நடிகை!

Comments Off on டுவிட்டரில் இருந்து வெளியேறிய நடிகை!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது டுவிட்டரில் அக்கவுண்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாயுடன் இருக்கும் புகைப்படத்தை கடைசியாக பகிர்ந்த ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் இதுவே எனது கடைசி டுவிட் என்று தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதால் மேலும் பல பிரபலங்கள் டுவிட்டரில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் […]

Continue reading …

ரேசனில் புதிய திட்டம்

Comments Off on ரேசனில் புதிய திட்டம்

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ரேசன் கடைகளில் கண் கருவிழி சரிபார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டபபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று ரேசன் கடைகளில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, ரேசன் கடைகளில் உள்ள சரிபார்க்கும் கருவியில் விரல் ரேசனை பதிவு செய்வதில் சில நேரங்களில் தோல்வி ஏற்படுவதாகவும் அப்போது, கையெழுத்துப் பெற்று பொருட்கள் வழங்கப்படுவதாககவும் கூறினார்.

Continue reading …

முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!

Comments Off on முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!

மறுபடியும் முதலிலிருந்தா…..? ஆமாம் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று இந்த கேள்வியை ஒவ்வொருவர் மனதில் கேட்க வைத்திருக்கிறது.- இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.   உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான எக்ஸ் இ என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. இதே போல் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து […]

Continue reading …

மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு

Comments Off on மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவு

மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.   வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா 4வது அலையை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக […]

Continue reading …

“காத்து வாக்குல காதல்” டிரெய்லர்!

Comments Off on “காத்து வாக்குல காதல்” டிரெய்லர்!

முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்.” இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.   இந்நிலையில் தற்போது மற்ற மொழிகளிலும் ப்ரமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் “ரிஸிரி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக […]

Continue reading …

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Comments Off on பிரதமருக்கு முதல்வர் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்படுவதால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தமிழகத்தில் கடந்த சில காலமாக தொடர் மின்வெட்டு அதிகரித்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டிய மின்சாரம் வழங்கப்படாததே மின் தடைக்கு காரணம் என தெரிவித்திருந்தார். மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் நாட்டில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நிலக்கரி வரத்து குறைந்துள்ளதால் […]

Continue reading …

யுஜிசி முக்கிய அறிவிப்பு

Comments Off on யுஜிசி முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழகக் மானிய குழு தமிழகத்தில் உள்ள 4 பல்கலைக்கழகங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், புதிய கல்விக் கொள்கைக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி நிறுவனம் அறிவுறித்தியுள்ளது. இந்த அறிவிப்புகள் மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக வல்லுநர் குழுவை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில் யுஜிசி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

Continue reading …

தலைமுறையாக அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை!

Comments Off on தலைமுறையாக அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை!

பாஜக தலைவர் அண்ணாமலை “உதயநிதியின் கார் கமலாலயம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்” என கூறியுள்ளார். நேற்று சட்டமன்றத்தில் உதயநிதி எம்எல்ஏ, “என்னுடைய காரை தவறாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் அந்த காரை கமலாலயம் பக்கம் செல்ல விட்டுவிட வேண்டாம்” என்று கூறினார். அவரது இந்த காமெடியான பேச்சு சட்டமன்றத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, […]

Continue reading …

போஸ்டர் ஒட்டினால் அபராதம்!

Comments Off on போஸ்டர் ஒட்டினால் அபராதம்!

சென்னை மாநகராட்சி தெருக்களின் பொதுப்பலகைகளில் போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எச்சரிக்கை செய்துள்ளது.   இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல் சாலை, மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கல் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள், பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளது.

Continue reading …