Home » Entries posted by Shankar U (Page 552)
Entries posted by Shankar

கொடநாடே எங்களுக்கு கோயில்!

Comments Off on கொடநாடே எங்களுக்கு கோயில்!

சசிகலா தனது பேட்டியில் கொடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு சாதாரண இடமாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு அது கோயில் என கூறியுள்ளார்.   கடந்த சில ஆண்டுகளாக கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்து உள்ளது. முதல்கட்ட விசாரணை: சசிகலாவுக்கு கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பட்டது. இதில் முதல் நாள் விசாரணை நான்கு […]

Continue reading …

பிரிட்டன் பிரதமர் இந்திய பொருட்களின் வரி மீதான அதிரடி அறிவிப்பு!

Comments Off on பிரிட்டன் பிரதமர் இந்திய பொருட்களின் வரி மீதான அதிரடி அறிவிப்பு!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகையின் போது இந்திய பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   நேற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தார். இதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என்று அவர் கூறினார். அவரது இந்த அறிவிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக […]

Continue reading …

வாக்களித்த மக்களுக்காகவே பணியாற்றுவேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

Comments Off on வாக்களித்த மக்களுக்காகவே பணியாற்றுவேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தனியார் பள்ளியின் 30வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.   அப்போது அவர் பேசியதாவது: கொளத்தூர் தொகுதிக்கு வருவதில் மகிழ்கிறேன். வயதானாலும் நான் இன்னும் மாணவனாகவே உணர்கிறேன். மாணவர்களைச் சந்திக்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வாக்களித்த மக்களுக்குப் பணியாற்றுவேன். நான் உங்களில் ஒருவனாக இருக்கவேண்டும். ஓயாத பணியாற்றுவதால் நாட்டிலேயே முதன்மையாக முதல்வராக இருக்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Continue reading …

10 கிலோ கஞ்சா பறிமுதல்!

Comments Off on 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

இன்று ரயில்வே சிறாப்பு தனிப்படை பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி. சப்- இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue reading …

மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

Comments Off on மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

மாநில விளையாட்டுத்துறை தொடர்பாக விதி எண் 110 கீழ் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை, இளைஞர் நலன் கருதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   அந்த அறிவிப்பில் சென்னை அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும் எனவும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரு.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கபப்டும் எனவும், ரூ.22 கோடி ஒலிம்பிக் தங்கப்பதக்கம் தேடுதல் திட்டம் செயல்படுத்தப்படும் […]

Continue reading …

நடிகருக்கு அன்புமணி பாராட்டு!

Comments Off on நடிகருக்கு அன்புமணி பாராட்டு!

அன்புமணி ராமதாஸ் நடிகர் அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரங்களில் நடிக்க மறுத்ததற்காக பாராட்டியுள்ளார்.   புகையிலை நிறுவனம் பெருந்தொகையை ஊதியமாக விளம்பரத்தில் நடிப்பதற்கு தருதாக சொல்லியும், சமூகக்கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி பாராட்டியுள்ளார். புஷ்பா படத்தின் மூலம் இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுனை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அப்படி சமீபத்தில் புகையிலை சம்மந்தபட்ட ஒரு நிறுவனம் […]

Continue reading …

சசிகலாவிடம் சரமாரியான கேள்விகள்!

Comments Off on சசிகலாவிடம் சரமாரியான கேள்விகள்!

இன்று சசிகலாவிடம் அதிகாரிகள் கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு குறித்து 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கொடாநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் பல பிரமுகர்களிடம் விசாரணை நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து இன்று சசிகலாவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை செய்தனர். கொடநாடு எஸ்டேட் எப்போது வாங்கப்பட்டது, எத்தனை பேர் பணி […]

Continue reading …

எலக்ட்ரிக் வாகனங்களில் தீப்பிடிப்பதை கண்டறிய குழு!

Comments Off on எலக்ட்ரிக் வாகனங்களில் தீப்பிடிப்பதை கண்டறிய குழு!

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி எலக்ட்ரிக் வாகனங்களில் அடிக்கடி தீப்பிடிப்பதற்கான காரணத்தை அறியும் குழு ஒன்றை அமைக்க போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த உண்மை நிலையை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு பணியில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் அவ்வாறு காட்டப்பட்டது தெரியவந்தால் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். குறைபாடு உள்ள எலக்ட்ரிக் வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் தொடங்கலாம் என்றும் அவர் […]

Continue reading …

கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்கிறார் ஜெயம் ரவி!

Comments Off on கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்கிறார் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் “பூலோகம்.” இத்திரைப்படத்தை எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இவர்கள் இரண்டாம் முறையாக இணையும் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடிப்பில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் […]

Continue reading …

ரோஹித் சர்மா, இஷான் கிஷான் டக்-அவுட்

Comments Off on ரோஹித் சர்மா, இஷான் கிஷான் டக்-அவுட்

இன்று ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியதை அடுத்து சற்று முன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கி உள்ளது. முதல் ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இரண்டு பேர்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது மும்பை அணிக்கு பெரும் சோகமாக ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் […]

Continue reading …