Home » Entries posted by Shankar U (Page 565)
Entries posted by Shankar

’தளபதி 66’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?

Comments Off on ’தளபதி 66’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது என்பது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடக்கும் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களின் அறிவிப்புகள் […]

Continue reading …

அரசு பேருந்துகளில் சிசிடிவி

Comments Off on அரசு பேருந்துகளில் சிசிடிவி

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இரண்டாயிரம் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் புதிய செயல்திட்டம் கொண்டு வரப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியொன்றில் கூறியுள்ளார். போக்குவரத்து துறைக்கு என தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்தார்.

Continue reading …

உலக நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு! மத்திய அமைச்சர் தகவல்

Comments Off on உலக நாடுகளை விட இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு! மத்திய அமைச்சர் தகவல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் இன்று பேசியபோது உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையை பொருத்தவரை மற்ற நாடுகளில் உயர்த்தப்பட்டதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் […]

Continue reading …

டாஸ்மாக் பார்களை மூட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை!

Comments Off on டாஸ்மாக் பார்களை மூட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூடவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் முதன்மை அமர்வு தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்கு மூடவேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட […]

Continue reading …

அமமுக திமுகவுக்கு நெருக்கடி

Comments Off on அமமுக திமுகவுக்கு நெருக்கடி

சொத்து வரிகளை உயர்த்தியதை எதிர்த்து அமமுகவும் கண்டன கூட்டங்கள் நடத்தவிருக்கிறுக்கிறது. தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரிகளை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அமமுகவும் கண்டன கூட்டங்கள் நடத்தவிருக்கிறுக்கிறது. இது குறித்து அமமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு… வீடுகளுக்கான சொத்து வரியை 100 சதவீதம் வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்து வரியை 150 சதவீதம் வரையிலும் கொஞ்சமும் […]

Continue reading …

வினாத்தாள் லீக்! தடுக்க நடவடிக்கை!

Comments Off on வினாத்தாள் லீக்! தடுக்க நடவடிக்கை!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் நிலையில் வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. இன்று 12ம் வகுப்பிற்கான கணித தேர்வு நடைபெற இருந்த நிலையில் நேற்று அதன் வினாத்தாள்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் […]

Continue reading …

டில்லியில் திமுக அலுவலகம் திறப்பு

Comments Off on டில்லியில் திமுக அலுவலகம் திறப்பு

டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்த மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி அவர்களுக்காக காத்திருந்தார். சற்று நேரத்தில் வந்தடைந்த சோனியா காந்தியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அண்ணா சிலையை திறந்து வைத்தார் […]

Continue reading …

ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Comments Off on ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஜியோமி நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி 12 ப்ரோ சிறப்பம்சங்கள்: * 6.73–inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, * 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் * Snapdragon 8 Gen 1 SoC, 12TH LPDDR5 ரேம், * Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி […]

Continue reading …

வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Comments Off on வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறை வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் தாமதமாக நடைபெறுவதால் ஜூன் 13ம் தேதி அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

Continue reading …

சொத்து வரிகள் உயர்வு!

Comments Off on சொத்து வரிகள் உயர்வு!

தமிழ்நாடு அரசு சொத்தின் மீதான வரிகளை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்…   சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டடங்களுக்கு 50% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75%, 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150% உயர்த்தப்படுகிறது. இதேபோல, சென்னையோடு […]

Continue reading …