Home » Entries posted by Shankar U (Page 571)
Entries posted by Shankar

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி

Comments Off on பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு திடீர் நெஞ்சுவலி

இஸ்லாமாபாத், செப் 28: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக், 51, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தவர். அவர் 375 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,701 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,829 ரன்களை அவர் குவித்துள்ளார். […]

Continue reading …

நீட் தேர்வுக்கு நடிகை சாய் பல்லவி எதிர்ப்பு

Comments Off on நீட் தேர்வுக்கு நடிகை சாய் பல்லவி எதிர்ப்பு

சென்னை, செப் 28: பிரபல நடிகை சாய் பல்லவி, நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வுக்கு, தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசியல்வாதிகள் இதற்காக போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு குறித்து ஏற்கனவே பல சினிமா துறையினர் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை சாய் பல்லவி […]

Continue reading …

சூடுபிடிக்கும் ஐபிஎல் தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணி எது?

Comments Off on சூடுபிடிக்கும் ஐபிஎல் தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுழையும் அணி எது?

துபாய், செப் 28: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றதால், அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் நான்காவது அணி எது என்பதில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் 40வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் […]

Continue reading …

இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, செப் 28: நம் நாட்டில், 201 நாட்களுக்குப் பின், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, 20,000க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 18,795 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, […]

Continue reading …

மத்திய அமைச்சருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சந்திப்பு

Comments Off on மத்திய அமைச்சருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சந்திப்பு

புதுடெல்லி, செப் 28: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லிக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தனின்பேரில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேற்று (27.09.2021) சந்தித்தார். சரம் சக்தி பவனில் நடந்த இந்த சந்திப்பில், தமிழ்நாடு அரசின் […]

Continue reading …

வலுவிழக்கும் ‘குலாப்’ புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Comments Off on வலுவிழக்கும் ‘குலாப்’ புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி, செப் 27: ‘மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ‘குலாப்’ புயல், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு விழுந்தன. பின், இந்த புயல் ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் […]

Continue reading …

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம்

Comments Off on வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம்

புதுடெல்லி, செப் 27: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் மூன்ற் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு முதல், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, […]

Continue reading …

நடிகர் சூர்யா படம் குறித்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Comments Off on நடிகர் சூர்யா படம் குறித்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை, செப் 27: நடிகர் சூர்யாவின், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட […]

Continue reading …

தஞ்சை பெரிய கோவில் சிறப்பை பறைசாற்றிய மத்திய அமைச்சர்

Comments Off on தஞ்சை பெரிய கோவில் சிறப்பை பறைசாற்றிய மத்திய அமைச்சர்

தஞ்சாவூர், செப் 27: “ஏழு உலக அதிசயங்களை விட, தஞ்சை பெரிய கோவில் அதிக சிறப்புகளை கொண்டது” என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக, மத்திய ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தமிழகம் வந்துள்ளார். தஞ்சாவூருக்கு நேற்று வந்த பிரகலாத் சிங், இங்குள்ள பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அனுமதி பெற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் வராகி அம்மன், பெருவுடையார், பெரியநாகி […]

Continue reading …

ஐபிஎல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம்

Comments Off on ஐபிஎல் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடம்

அபுதாபி, செப் 27: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனை […]

Continue reading …