Home » Entries posted by Shankar U (Page 582)
Entries posted by Shankar

அதிமுக 10,000 திமுக 25000:அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்

Comments Off on அதிமுக 10,000 திமுக 25000:அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன அதிமுக நேற்று காலை விருப்ப மனுவை பெற்றுக் கொள்ள அறிவித்துள்ளதோடு வேட்புமனு ரூபாய் […]

Continue reading …

திமுக கொடுத்த கோடிரூபாய் எங்கே..? கம்யூனிஸ்டுகளிடையே கலவரம்..!

Comments Off on திமுக கொடுத்த கோடிரூபாய் எங்கே..? கம்யூனிஸ்டுகளிடையே கலவரம்..!

கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாங்கிய ரூ.3 கோடிக்கு கணக்கு இருக்கிறதா எனக் கேட்டு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அக்கட்சியினர். நாடாளுமன்ற தேர்தலின்போது தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இரண்டு தொகுதிகளும், 15 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது. தொகுதிக்கு, 6 கோடி வீதம் 12 கோடி ரூபாயை செலவழித்து விட்டு மீதம் 3 கோடி ரூபாயை, தி.மு.க.,விடமே திருப்பி கொடுத்து விட்டதாக நிர்வாகிகள் சொல்லி […]

Continue reading …

எடப்பாடியாரை தனியாக அழைத்த மோடி… !10நிமிட சந்திப்பு.. !நடந்தது என்ன?

Comments Off on எடப்பாடியாரை தனியாக அழைத்த மோடி… !10நிமிட சந்திப்பு.. !நடந்தது என்ன?

சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் தனியாக அழைத்து சுமார் 10 நிமிடங்கள் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று விழா முடிந்த உடன் நேரு ஸ்டேடியத்தில் உள்ள விருந்தினர் அறைக்கு பிரதமர் மோடி நேராக சென்றார். உள்ளே சென்றதும் தனது உதவியாளரிடம் கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை உள்ளே அழைக்குமாறு கூறியுள்ளார் மோடி. இதனை அடுத்து தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது- அவரும் அடுத்த நிமிடமே மோடி […]

Continue reading …

10மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது தெரியுமா?

Comments Off on 10மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது தெரியுமா?

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னரே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான பாட திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் மாணவர்களும் , […]

Continue reading …

மேளதாளங்களுடன் பாஜாகாவில் இணைந்தது நடிகர் சிவாஜி மகனின் குடும்பம்.. !!குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு

Comments Off on மேளதாளங்களுடன் பாஜாகாவில் இணைந்தது நடிகர் சிவாஜி மகனின் குடும்பம்.. !!குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்பு

சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று பாஜகவில் இணைந்தனர். தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தலைவர் எல் முருகனை, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ராம் குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ராம்குமார், “குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போதே மோடியின் […]

Continue reading …

கும்பகோணம் கோயிலில் சசிகலாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை?

Comments Off on கும்பகோணம் கோயிலில் சசிகலாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை?

சென்னை: ”கும்பகோணம் கோயிலில், சசிகலாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரகசிய பூஜை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோயிலுக்கு நேற்று வந்தார். பின்னர், ‘நிகும்பலா’ யாகத்தில் கலந்து கொண்டு ரகசிய பூஜை செய்து விட்டு சென்றார். அவர் வந்த தகவல் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. எனினும், சில நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று அமைச்சருடன் சேர்ந்து தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க.நிர்வாகிகள் கூறியதாவது:- […]

Continue reading …

95,000 விவசாயிகளுக்கு ரூ 1,045 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி வாய்ப்பு

Comments Off on 95,000 விவசாயிகளுக்கு ரூ 1,045 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி வாய்ப்பு

ஈரோடு: தமிழக அரசு, கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில், 95 ஆயிரம் விவசாயிகள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில் கடந்த, 5ல் முதல்வர் பழனிசாமி, ‘கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதாக’ அறிவித்தார். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பயனடையும், விவசாயிகள் பட்டியலை ஒருங்கிணைத்து வருகின்றனர்.இது குறித்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், […]

Continue reading …

ஆடியோ செயலியின் பக்கம் கவநத்தை திருப்பும் முகநூல் நிறுவனம்

Comments Off on ஆடியோ செயலியின் பக்கம் கவநத்தை திருப்பும் முகநூல் நிறுவனம்

பிரபல சமூக வலைதள நிறுவனமான முகநூல் தற்போது ஆடியோ செயலி உருவாக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் சமூக வலைதளமாக முகநூல் உள்ளது. மிகச்சிறிய காலத்தில் வேகமாக தனது வளர்ச்சியை அடைந்த அந்த நிறுவனம் வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளையும் கைப்பற்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆடியோ வடிவிலான செயலி உருவாக்கத்தின் பக்கம் முகநூல் நிறுவனம் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து கிளப்ஹவுஸ் போன்ற ஆடியோ உரையாடல் செயலியை உருவாக்கும் […]

Continue reading …

தமிழகத்தில் 5இடங்களில் புதிய தொழில் பூங்கா :ரூ 1500கோடியில் பணிகள் தீவிரம்

Comments Off on தமிழகத்தில் 5இடங்களில் புதிய தொழில் பூங்கா :ரூ 1500கோடியில் பணிகள் தீவிரம்

சென்னை புறநகரில் உள்ள மணலூரில் ஒரு பிரத்தியேக இ-வாகன பூங்காவையும், மாநிலத்தின் பிற பகுதிகளில் நான்கு தொழில்துறை பூங்காக்களையும் உருவாக்கத் தமிழ்நாட்டின் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) தயாராக உள்ளது. 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் ரூ.1,536 கோடி செலவில் திருவள்ளூர் மாவட்டத்தின் மணலூரில் தொழில்துறை பூங்காக்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் வல்லம் வடகல் (கட்டம் -2) மற்றும் ஓரகதம் (கட்டம் -2), திருச்சியில் மணப்பாறை மற்றும் திண்டிவனம் வில்லுபுரத்திலும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ‘நாங்கள் தேவையான குடிமை […]

Continue reading …

விவசாயிகள் நலன் கருதி பயிர் கடன் தள்ளுபடி :15 நாட்களுக்குள் ரசீது வழங்கப்படும் -முதல்வர்

Comments Off on விவசாயிகள் நலன் கருதி பயிர் கடன் தள்ளுபடி :15 நாட்களுக்குள் ரசீது வழங்கப்படும் -முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கையனூர் என்ற இடத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார். பின்னர் பிரசாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் 16 லட்சத்து 43 […]

Continue reading …