Home » Entries posted by Shankar U (Page 63)
Entries posted by Shankar

கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

Comments Off on கோவிஷீல்டை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கோடிக்கணக்கானோர் செலுத்தியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு நடந்தது. இவ்வழக்கின் போது கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுத்தும் என்றும் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே 175 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது தாக்கல் செய்த […]

Continue reading …

விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!

Comments Off on விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!

சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் நடிகர் ராகவா லாரன்ஸ் மே 1-ம் தேதி முதல் சேவை அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை விவசாயி […]

Continue reading …

சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

Comments Off on சாம் பிட்ரோடா மீண்டும் சர்ச்சை பேச்சு!

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சையை கிளப்பினார். அது பெரும் விவாதப் பொருளானது. இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என அவர் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியாவைப் போன்ற […]

Continue reading …

டி இமானுடன் முதல் முறை இணைந்த மனோ!

Comments Off on டி இமானுடன் முதல் முறை இணைந்த மனோ!

இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள ‘லெவன்’ திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். இதுகுறித்து மனோ கூறும்போது, “இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார். இது குறித்து டி இமான் கூறும்போது, “மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக […]

Continue reading …

சென்னை வானிலை மையம் தகவல்!

Comments Off on சென்னை வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் மே 11ம் தேதி வரை 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் […]

Continue reading …

பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஐடியா!

Comments Off on பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் ஐடியா!

தங்கள் பயனாளிகளுக்கு 5ஜி சேவையை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. ஆனால் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்கு 3ஜி சேவை மட்டுமே வழங்கி வருகிறது. இதனால் ஏராளமான பயனாளிகள் அதிலிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் பயனாளிகளை தக்க வைத்துக்கொள்ள வோடபோன் ஐடியாவுடன் பிஎஸ்என்எல் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இதன் மூலம் பிஎஸ்என்எல் பயனாளிகளுக்கு நேரடியாக 5ஜி சேவையை வழங்கலாம் என்றும் ஐடியா கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜியோ […]

Continue reading …

அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

Comments Off on அபராதத்துடன் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி!

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களுடன் உரையாட அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமீபத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படும் மனு நீதிமன்றத்தில் விசாரணைகள் உள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே […]

Continue reading …

செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கேள்வி!

Comments Off on செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கேள்வி!

முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தமிழிசை வெளியிட்ட அறிக்கையில், “கருணாநிதி நினைவிடத்தை பராமரிக்கிறார்கள். ஆனால் காமராஜர் நினைவிடத்தை பராமரிக்காமல் வைத்துள்ளனர் என்று கடந்த ஏப்ரல் 11, 2024-ம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தேன். ஏப்ரல் -11, 2024-ம் தேதியன்று தென்சென்னை மக்களவைத் […]

Continue reading …

மாயாவதி உத்தரவால் பரபரப்பு!

Comments Off on மாயாவதி உத்தரவால் பரபரப்பு!

மாயாவதி உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னால் முதலமைச்சரும், பகுஜன் சமாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் கடந்த ஐந்து மாதத்திற்கு முன் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். ஆனால் திடீரென ஆகாஷ் ஆனந்த் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதாக மாயாவதி உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி உத்தரப்பிரதேச மாநில ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து மாயாவதி அளித்துள்ள விளக்கத்தில், “ஆகாஷ் ஆனந்த் இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை. அதுவரை அவர் […]

Continue reading …

விடுதலை முழக்க மாநாட்டில், கலந்து கொண்ட வைரமுத்து!

Comments Off on விடுதலை முழக்க மாநாட்டில், கலந்து கொண்ட வைரமுத்து!

மதுரை வலையங்குளம் பகுதியில் வணிகர்கள் விடுதலை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “இளையராஜா விவகாரம் குறித்து பேசக்கூடாது என்று சொல்லி விட்டேன். எம்.எஸ்.வி.யா, கண்ணதாசனா என்று கேட்டால், உடலா, உயிரா என்று கேட்டால் என்ன பதில் வருமோ அதுதான் எம்.எஸ்.வி.யா, கண்ணதாசனா என்கிற கேள்விக்கு பதில். எம்.எஸ்.வி. உயிராக இருந்திருக்கிறார், கண்ணதாசன் தமிழ் வழியாக உடலாக இருந்திருக்கிறார். உடலும், உயிரும் கூடி இயங்கியதால் தான் இலக்கியம் என்கிற குழந்தை […]

Continue reading …