
மத்திய உள்துறை அமைச்சகம் டில்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் புரளியே என்று விளக்கமளித்துள்ளது. இன்று மின்னஞ்சல் மூலம் டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய […]
Continue reading …
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் (49) மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில் தனியார் இடத்தில் தகர செட்டு அமைத்து அந்த பொருட்களை அங்கு வைத்து வருகிறார். விழா காலங்களில் பயன்படுத்தப்படும் கலைநயம் மிக்க அலங்கார பொருட்கள், மைக் செட்டுகள், கூம்பு வடிவ குழாய்கள் மைக் செட் பாக்ஸ்கள் டியூப் லைட்டுகள், சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் […]
Continue reading …
பொதுமக்கள் கேரளாவில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஒருவர் “முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஏசி இருந்தது ஆனால் இப்போது வீட்டுக்கு நான்கு ஏசி உள்ளது அதனால் தான் மின்தடை ஏற்பட்டது” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மின்தடை குறித்து கூறும்போது, “மின்சாரம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு ஏசி இருந்த […]
Continue reading …
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் அஜீத் குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜீத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்தின் “தீனா” உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். நடிகர் அஜீத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், […]
Continue reading …
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னை மூத்த அமைச்சர் என சொல்லி கொள்ளும் துரைமுருகன் மேகதாது விவகாரதில் என்ன நிர்வாகம் செய்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கிய பின் செய்தியாளர்களிடம், “இதுவரை எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம், ஆனால் இம்முறை வாக்கு சதவீதம் அறிவிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. கடைசியில் 69 […]
Continue reading …
சல்மான் கான் வீடருகே கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடந்தது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் மாதம் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இது குறித்து அனுஜ்தாபன் கைது செய்யப்பட்டார். மும்பை சிறப்பு பிரிவு போலீஸ் காவலிலிருந்தவர் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் எதற்காக தற்கொலை […]
Continue reading …
இரண்டு பேர் ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களில் அவர்கள் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்ற சாப்பிட்ட இரண்டு நபர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவரின் பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ள பாடத்தை நீக்குவோம் என தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம், “மே தினம் தொழிலாளர் வர்க்கத்தினரின் தியாகத்தால் உருவானது எனவும் தொழிலாளர்கள் நலனைக் காத்தவர் எம்ஜிஆர். திமுக அரசு தொழிலாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடித்துக் கொண்டு வருவதாகவும் திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் அஜீத்குமாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர்களில் தைரியமாக செயல்படக்கூடியவர் அஜீத்குமார். […]
Continue reading …
பிரதமர் மோடி பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களில் கர்நாடகாவின் ஹாசன் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் பரவி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து நரேந்திர மோடி பேசாமல் எப்போதும் போல் மவுனம் காத்து வருகிறார். இது குறித்து […]
Continue reading …
நடிகர் விஜய்குமார், ‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கியவர். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘எலக்சன்’ திரைப்படம், மே 17ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். ‘சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ‘அயோத்தி’ புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் […]
Continue reading …