
நேற்று ஓய்வு எடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அதற்கு முந்தைய நாள் கோட்டைக்கு சென்று சில முக்கிய ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அதிகாரிகளுடன் தமிழகத்தில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கிறதா? அதேபோல் மின்தடை ஏற்படாமல் கோடையை சமாளிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சில அறிவுரைகளையும் கூறிவிட்டு முதல்வர் கொடைக்கானல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி என்பதால் கோட்டைக்கு […]
Continue reading …
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை 10 ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளது. ரயில்வே, சாலைவசதி மற்றும் விமானநிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்புக்கான பாஜகவின் ஆண்டு பட்ஜெட், […]
Continue reading …
பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களின் தயாரிப்புக்கு தவறான விளம்பரங்கள் செய்த புகாரில் தடைவிதித்து உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம், பல்பொடி, சோப்பு, உணவுப் பொருட்கள் என பல்வேறு பொருட்களை யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் இணைந்து தொடங்கிய ஆயுர்வேத முறைப்படி தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேத தயாரிப்பு குறித்து விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம், கொரோனா மருந்து குறித்து தவறான தகவல்களை தெரிவித்திருந்ததாக […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலை ஜுன் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3000 […]
Continue reading …
திடீரென சென்னையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிராட்வே பேருந்து நிலையம் திடீரென தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது பிராட்வே பேருந்து நிலையமும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக சென்னை தீவு திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மல்டி மாடல் இன்டெக்கரேஷன் என்ற […]
Continue reading …
ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் இக்கோயில் கிணற்றில் புதையல் இருப்பதாகவும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும் வதந்திகள் பரவியுள்ளமைக்கு விளக்கம் அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் சன்னதிக்கு பின்புறம் 1500 அடி ஆழ கிணறு உள்ளது. அந்த கிணற்றை சமீபத்தில் சுத்தம் செய்த போது தங்கம் வெள்ளி ஆகியவை புதையல் கிடைத்ததாகவும் கோவில் நிர்வாகம் அதை கணக்கில் காட்டாமல் பதுக்கி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தவறான தகவல் என கோவில் நிர்வாகம் […]
Continue reading …
ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இந்தியாவில் கொரோனாவுக்காக செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதை இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகமே முடங்கியது. இந்தியாவில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டனை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தியாவில் அதன் தயாரிப்பு பணிகள் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் […]
Continue reading …
இந்தோனேஷியாவில் தீவு ஒன்றில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. குட்டிக் குட்டித் தீவுகள் உள்ள இந்தோனேஷியாவில் கணிசமான அளவில் வெடிக்கும் நிலையில் எரிமலைகளும் உள்ளன. நிலத்தகடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ளதால் அடிக்கடி இந்தோனேசியாவில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நடக்கிறது. கடந்த 16ம் தேதி ருயாங்க் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று மீண்டும் ருயாங் தீவில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இம்முறை […]
Continue reading …
இயக்குனர் தங்கர் பச்சான் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது, ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். பாமக வேட்பாளராக கடலூர் தொகுதியில் நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறுவாரா என்பது ஜூன் 4ம் தேதி தான் தெரியும். அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். […]
Continue reading …
ஏற்காடு மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதி புகழ்பெற்ற சுற்றுலாதளமாகவும் இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையில் பல சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கும் பயணித்து வருகின்றனர். இன்று வழக்கமாக ஏற்காடு வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென அருகே இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இவ்விபத்து சம்பவத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த […]
Continue reading …