Home » Entries posted by Shankar U (Page 7)
Entries posted by Shankar

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து; முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து; முதலமைச்சர் ஸ்டாலின்!

  தூய்மை பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். “கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குரூப் 2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார். என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன், இன்றிலிருந்து எங்கள் வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது […]

Continue reading …

கேரள வங்கி அறிவிப்பு!

Comments Off on கேரள வங்கி அறிவிப்பு!

கேரள வங்கி வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால் அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. திடீரென கடந்த மாதம் 30ம் தேதி வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய ராணுவம் உள்பட மீட்பு படையினர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்பு போக ஏராளமான பொருட்கள் சேதமடைந்திருப்பது அப்பகுதி […]

Continue reading …

விஜய் படம் குறித்து நாளை முறையான அறிவிப்பு!

Comments Off on விஜய் படம் குறித்து நாளை முறையான அறிவிப்பு!

நாளை “தி கோட்” படத்தின் டிரெயிலர் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “தி கோட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “தி கோட்” படத்தில் விஜய் […]

Continue reading …

ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்?

Comments Off on ஆம்ஸ்ட்ராங்க் குடும்பத்துக்கு கொலை மிரட்டல்?

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பள்ளி தாளாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்க் அவரது வீட்டின் முன்னே மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் பல ரவுடிகளை போலீசார் கைது செய்தபோது ரவுடி திருவெங்கடம் என்பவர் எண்கவுண்ட்டர் செய்யப்பட்டார். மேலும் விசாரணையில் இக்கொலை […]

Continue reading …

சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வர 6 மாதம் ஆகுமா?

Comments Off on சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வர 6 மாதம் ஆகுமா?

பூமிக்கு விண்வெளியிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு விண்வெளி வீரர்கள் திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் இருவரும் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்துக்கு சென்றனர். திட்டமிட்டபடி அவர்கள் அதே மாதம் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் விண்வெளி களத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. […]

Continue reading …

விஜய் மகன் இயக்கத்தில் சூரி ஹீரோவா?

Comments Off on விஜய் மகன் இயக்கத்தில் சூரி ஹீரோவா?

நடிகர் சூரி நாயகனாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிந்து நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகனாக நடிக்க கவின், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட வந்தது. தற்போது சூரியிடம் […]

Continue reading …

சோனியா காந்தி &- உத்தவ் தாக்கரே சந்திப்பு?

Comments Off on சோனியா காந்தி &- உத்தவ் தாக்கரே சந்திப்பு?

சோனியா காந்தியை டில்லிக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து சோனியா காந்தி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. டில்லிக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சென்றுள்ளார். அங்கு அவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டவரை சந்தித்தார். அடுத்ததாக சோனியா காந்தி உடன் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் இச்சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து […]

Continue reading …

“மாயன்” செப்டம்பர் 19ம் தேதி ரிலீஸ்!

Comments Off on “மாயன்” செப்டம்பர் 19ம் தேதி ரிலீஸ்!

சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் “மாயன்” திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. “மாயன்” திரைப்படம் நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம். படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் […]

Continue reading …

மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

Comments Off on மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

முன்னாள் டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதே ஆண்டு மார்ச் 9ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் […]

Continue reading …

கோவில் தொடர்பான வழக்கிற்கு நீதிமன்றம் காட்டம்!

Comments Off on கோவில் தொடர்பான வழக்கிற்கு நீதிமன்றம் காட்டம்!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலை பூட்டி வைப்பது சாமியை சிறை வைப்பதற்கு சமம் என்று கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் முத்தாலம்மன் மாரியம்மன் கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்க கோரி, பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலைப் பூட்டியதால், சாமிக்கு […]

Continue reading …