
வேங்கை வயல் உள்பட இரண்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளதாகவும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் ஓட்டு போட அந்த கிராம மக்கள் வர முடியாது என்று கூறியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீர் தொட்டிகள் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கோபம் அப்பகுதி மக்களிடையே உள்ளது. இந்த கோபத்தை அப்பகுதி மக்கள் தேர்தலில் காட்டி வருவதாக தெரிகிறது. வேங்கை வயல் மற்றும் இறையூர் ஆகிய […]
Continue reading …
சசிகலா மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி போட்ட தப்புக்கணக்கு அவருக்கு புரியும் என்று பேட்டியளித்துள்ளார். இன்று காலை 7 மணி முதல் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகிறார்கள். சசிகலா தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களிடம், “மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் போட்ட தப்புக்கணக்கு அவர்களுக்கே புரியும்” எடப்பாடி பழனிச்சாமியை […]
Continue reading …
மணிப்பூரில் இன்று மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை முதலே தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக வன்முறை நிகழ்ந்து வருவதால் கூடுதல் பாதுகாப்புடன் அங்கு காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் உள் மணிப்பூரின் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் […]
Continue reading …
இன்று நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக லண்டனிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் லண்டனில் வசித்து வந்தவர் தனது வாக்கினை பதிவு செய்ய […]
Continue reading …
இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உசிலம்பட்டி அருகே இரயில் பாதையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த கிராமத்தின் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுவதுடன் 10% ஒட்டு மட்டுமே பதிவாகியுள்ளன. இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சக்கிலியங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மதுரை – போடி […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தங்கள் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இன்று தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ஒ.பன்னிர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர், “பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பாரத பிரதமர் நரேந்திர […]
Continue reading …
28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் மற்றும் இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காக நீக்கியுள்ளது. ப்ராஜக்ட் நிம்பஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூகுள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையடுத்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய […]
Continue reading …
பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், மகளிர் மட்டும் இருக்கும் இந்த பிங்க் வாக்குச்சாவடிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிங்க் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாக மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்ற உள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியோருக்கு […]
Continue reading …
‘கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் “விசில் போடு” என்ற சிங்கிள் பாடல் வெளியானது. விஜய் பாடிய இப்பாடலுக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கிடைத்துள்ளது. […]
Continue reading …
கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை முடங்கியதோடு, மழை நீர் இன்னும் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பேய் மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் துபாய் நகரம் இன்னும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. பெருமழை குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனமான WAM இது ‘வரலாறு காணாத வானிலை நிகழ்வு’, கடந்த 1949-ம் ஆண்டு முதல் […]
Continue reading …