பிரதமர் மோடி தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 77வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் டில்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மீனவர்கள் 32-பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் […]
Continue reading …முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பள்ளி கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார். பின்னர் பேசிய அவர், “தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதுக்கு […]
Continue reading …திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த அனுமதி கோரி ரயில்வே கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, […]
Continue reading …ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் திடீரென கூட்டம் நடத்தப் போவதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் துணைவேந்தர் கூட்டத்தை நடத்தினார். அதில் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. உயர்கல்வி அமைச்சரின் கூட்டத்தை அடுத்து அதிரடியாக ஆளுநர் ரவி, துணைவேந்தர் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் முருகனுக்கு அரோகரா என சொல்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், […]
Continue reading …இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மல்யுத்தம் என்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “என்னை மன்னியுங்கள் அம்மா, மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை” என்று கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட […]
Continue reading …“கல்வி” திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். “கல்கி” திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு […]
Continue reading …இன்று தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகைக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யாவும் -சமந்தாவும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடால் 2021ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். சமந்தாவை பிரிந்த பின் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபியா துலிபாலா உடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி […]
Continue reading …கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இப்படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சோலாவாக ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை ஜியென் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஆர் […]
Continue reading …