
வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று, விழுப்புரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர், “பழனிசாமி பேசுவதைப்பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. என்று அந்த காமெடி நினைவுக்கு வருகிறது. பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே […]
Continue reading …
மர்ம நபர்கள் கிருஷ்ணகிரி அருகே எஸ்பிஐ, ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி.ஐ, ஏடிஎம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எஸ்பிஐ ஏடிஎம்மில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் 16 லட்சம் ரூபாயை நிரப்பிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை கட்டிடத்தின் உரிமையாளர் வெளியில் வந்து பார்க்கும் பொழுது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கட்டிட உரிமையாளர் குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து […]
Continue reading …
பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருடன் 30க்கும் மேற்பட்ட பாஜகவினரும் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் […]
Continue reading …
தற்போது இணையத்தில் முழுவதும் வைரலாகி உள்ள இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப் பல படங்கள் முழு ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில், […]
Continue reading …
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்த படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருப்பதை அடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் முடிந்த பின் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஷங்கர் […]
Continue reading …
இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையாக சுயாட்சியும் கூட்டாட்சியும் மதச்சார்பின்மை சமூக நீதி தமிழ் ஆட்சி மொழி கல்வி நதிநீர் உரிமைகள் சிறுபான்மையினர் நல தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன் தூக்கு தண்டனை ஒழிப்பு தமிழீழம் மலர பொது வாக்குறுப்பு புதுவை மாநிலம் உள்ளிட்ட 74 தலைப்புகளின் கீழ் இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், “இந்தியா கூட்டணி வெற்றி […]
Continue reading …
இஸ்ரேல் நாட்டு ராணுவம், ஏற்கனவே பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீதும் பாலஸ்தீனம் மீது போர்தொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீது நேரடி ராணுவத் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பு தயாரி நிலையை அதிகரித்துள்ளது. அதேபோல், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க சொத்துக்களுக்கு எதிராக ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தும் சாத்தியக் கூறுகள் இருப்பதால் அமெரிக்காவும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், […]
Continue reading …
டில்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை காவலை, ஏப்ரல் 18ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி மாநில துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இன்று மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ம் தேதி வரை நீட்டித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
Continue reading …
வரும் 12ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகிறார். அவர் கோவை மற்றும் நெல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி இந்தியா கூட்டணியின் தலைவர்களும் இவ்விரு கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்த முதலமைச்சர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தை முதலில் சென்னையில் நடத்த தான் திட்டமிடப்பட்டதாம். ஆனால் அண்ணாமலைக்கு செக் வைக்க வேண்டும் […]
Continue reading …
நேற்று நடைபெற்ற 10ம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்துள்ளது-. தற்போது 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 26ம் தேதி தொடங்கிய இத்தேர்வை லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். நேற்று நடைபெற்ற அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பாராத பல வினாக்கள் வினாத்தாளில் இருந்ததாகவும் வழக்கமாக இடம்பெறும் கேள்விகள் 25 சதவீதம் கூட […]
Continue reading …