Home » Entries posted by Shankar U (Page 85)
Entries posted by Shankar

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Comments Off on தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தீவு நாடான தைவானில் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் ரிக்டர் அளவில் 72 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில், ரயில்களில் நிலநடுக்கத்தின்போது பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பலர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான […]

Continue reading …

ஒரே மாதத்தில் 3 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை!

Comments Off on ஒரே மாதத்தில் 3 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கை!

கல்வித்துறை கடந்த ஒரு மாதத்திற்குள் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளிகளில் சேர்த்து சாதனை படைத்துள்ளது. தேர்தல், பள்ளி பொதுத்தேர்வுகள் என பல பரபரப்பான செயல்பாடுகள் தொடர்ந்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை மார்ச் முதல் தேதியிலேயே தொடங்கியது. 2024-25ம் ஆண்டிற்கான கல்வியாண்டில் 5.5 லட்சம் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் 5 வயது குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்ப்பது, கிராமங்கள்தோறும் […]

Continue reading …

முதலமைச்சருக்கு பறந்ததா உளவுத்துறை ரிப்போர்ட்?

Comments Off on முதலமைச்சருக்கு பறந்ததா உளவுத்துறை ரிப்போர்ட்?

உளவுத்துறை தமிழகத்திலுள்ள 8 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று தமிழக முதலமைச்சருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் சுதாரித்து அந்த தொகுதிகளுக்கு கூடுதலாக சில அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினாலும் உளவுத்துறை முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள ரகசிய ரிப்போர்ட்டில் […]

Continue reading …

லோகேஷின் அடுத்த படத்தின் லேட்டஸ்ட் தகவல்!

Comments Off on லோகேஷின் அடுத்த படத்தின் லேட்டஸ்ட் தகவல்!

‘தலைவர் 171’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாகவும், […]

Continue reading …

80 வயது முதியவரை காதலித்த 34 வயது பெண்மணி!

Comments Off on 80 வயது முதியவரை காதலித்த 34 வயது பெண்மணி!

முகநூலில் இளைஞர்கள் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், முதியவர் ஒருவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டு திருமணம் நடந்துள்ளது. இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பேசி பழகி காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் தினசரி செய்தியாகி வருகின்றன. ஆனால் மத்திய பிரதேசத்தில் 80 வயது முதியவருடன் 34 வயது பெண்மணிக்கு ஏற்பட்ட சமூக வலைதளத்தில் பழக்கம் காதலாக மாறி திருமணமாக முடிந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் […]

Continue reading …

‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர் ஏப்ரல் 8ம் தேதி ரிலீஸ்!

Comments Off on ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர் ஏப்ரல் 8ம் தேதி ரிலீஸ்!

‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் டீசர் ஏப்ரல் மாதம் 8ம் தேதி ரிலீசாக உள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது. இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது. நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளான […]

Continue reading …

அதிமுகவுக்கு ஆதரவு: புரட்சி பாரதம் அறிவிப்பு!

Comments Off on அதிமுகவுக்கு ஆதரவு: புரட்சி பாரதம் அறிவிப்பு!

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திமுக கூட்டணியில் தொகுதியே கொடுக்காமல் இருந்தாலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தருவது போல் அதிமுக கூட்டணியிலும் தொகுதி பெறாமல் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு என தெரிவித்துள்ளார் பூவை ஜெகன்மூர்த்தி கூறுகையில், “மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால் வருத்தத்தில் இருந்தோம். எங்கள் கட்சி தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடரலாம் என்று கூறியதால் 40 தொகுதிகளிலும் புரட்சி பாரதம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும்” […]

Continue reading …

ஓட்டு போடுவது குறித்து நடிகர் விஜய்சேதுபதி வீடியோ!

Comments Off on ஓட்டு போடுவது குறித்து நடிகர் விஜய்சேதுபதி வீடியோ!

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஜய் சேதுபதி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் “ஒவ்வொரு தேர்தல் வரும் போது நம்முடைய ஒரு ஓட்டு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று பலர் மெத்தனமாக இருந்து விடுகிறார்கள். அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய எதிர்கால தலைமுறையினர்களுக்காக […]

Continue reading …

அதிமுகவை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள்; கொமதேக தலைவர் ஈஸ்வரன்!

Comments Off on அதிமுகவை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்கள்; கொமதேக தலைவர் ஈஸ்வரன்!

கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் திமுகக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கூட்டணியிலிருந்து வெளியே வருவது போல் எடப்பாடி […]

Continue reading …

வள்ளலார் மையம் விரிவான அறிக்கை; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Comments Off on வள்ளலார் மையம் விரிவான அறிக்கை; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் சத்தியஞான சபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் வள்ளலார் சர்வதேச மையத்தை வடிவமைக்க சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்ற ஏழு நிறுவனங்களும் தகுதியான நிறுவனங்கள் […]

Continue reading …