Home » Entries posted by Shankar U (Page 92)
Entries posted by Shankar

மதிமுக எம்பியை படுகொலை செய்த வைகோ! தமிழிசை ஆவேசம்!

Comments Off on மதிமுக எம்பியை படுகொலை செய்த வைகோ! தமிழிசை ஆவேசம்!

தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வைகோவின் வாரிசு அரசியலால் மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் எம்பி கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுக்காததால், அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பேசப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், “ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் இறப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தெரிவித்தார். வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து […]

Continue reading …

அண்ணாமலைக்கு டி.ஆர்.பி ராஜா பதிலடி!

Comments Off on அண்ணாமலைக்கு டி.ஆர்.பி ராஜா பதிலடி!

அண்ணாமலை டி.ஆர்.பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை என்ற கருத்தை வெளியிட்டார். அதற்கு சில்லறை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் கோவையில் நடந்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம், “தஞ்சாவூரை சேர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை. அவரது தந்தை பணம் சேர்த்து வைத்தார். […]

Continue reading …

நிர்மலா சீதாராமனை நீக்க ஜனாதிக்கு கடிதம் எழுதியவர் வடசென்னையில் போட்டி!

Comments Off on நிர்மலா சீதாராமனை நீக்க ஜனாதிக்கு கடிதம் எழுதியவர் வடசென்னையில் போட்டி!

ஐஆர்எஸ் ஆர் அதிகாரி ஒருவர் குடியரசு தலைவருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பணியில் இருந்தபோது கடிதம் எழுதினார். அவர் தற்போது சுயேட்சையாக வட சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் என்பவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு […]

Continue reading …

உள்ளாடையில் தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது!

Comments Off on உள்ளாடையில் தங்கம் கடத்தல்; 2 பெண்கள் கைது!

சட்டவிரோதமாக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் செயல் அதிகரித்து வருகிறது. இன்று இரண்டு பெண்கள் உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தியதாக சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளாடை, சூட்கேஸில் ரகசிய அறை அமைத்து துபாயில் இருந்து 10.3 கிலோ தங்கம் கடத்திய இரண்டு பெண்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பினர். இருவரையும் சந்தேகப்பட்ட சுங்கத்துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அவர்கள் தங்கள் உள்ளாடையிலும், […]

Continue reading …

டிடிவி தினகரனின் விமர்சனம்!

Comments Off on டிடிவி தினகரனின் விமர்சனம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆண்டிப்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருகை தந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு பெண்கள் கும்ப மரியாதை செலுத்தி மலர் தூவி வரவேற்றார்கள். அவர் கூட்டத்தில் பேசியபோது, “தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி உள்ளார். ஆனால் திமுகவின் கூட்டணி பிரதமராக யாரை […]

Continue reading …

கனிமொழி உறுதி!

Comments Off on கனிமொழி உறுதி!

கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தபின் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் […]

Continue reading …

உறுதிமொழி எடுக்க தடுமாறிய நாம் தமிழர் வேட்பாளர்!

Comments Off on உறுதிமொழி எடுக்க தடுமாறிய நாம் தமிழர் வேட்பாளர்!

நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் கௌசிக் இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட […]

Continue reading …

அமெரிக்காவின் புளோரிடாவில் அதிரடி மசோதா!

Comments Off on அமெரிக்காவின் புளோரிடாவில் அதிரடி மசோதா!

உலகத்தில் சமூக வலைதளம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்த சமூக வலைதளங்களால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் பாதிக்கப்படுகின்றனர். அவ்வகையில் 15 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை என்ற மசோதாவை அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் அமல்படுத்தி உள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள 15 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த […]

Continue reading …

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டி!

Comments Off on பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டி!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இம்முறை கூட்டணி இல்லை என சிரோமனி அகாலி தளம் கட்சி அறிவித்துவிட்டது. பாஜகவும் தனித்து போட்டியிட உள்ளதாக […]

Continue reading …

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அறிவிப்பு!

Comments Off on தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அறிவிப்பு!

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள நாற்பது தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் முடிவடைகிறது. சென்னையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் நடைபெற்றது. அவர் […]

Continue reading …