Home » Entries posted by Shankar U (Page 94)
Entries posted by Shankar

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

Comments Off on சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் […]

Continue reading …

பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பேருந்து மற்றும் வாகனங்கள் மற்றும் ரயிலில் பழனி முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள். இன்று பழனி ரயில் நிலையத்தில் திடீரென்று 50க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸ் மற்றும் பழனி நகர போலீசார் மற்றும் வெடிகுண்டு […]

Continue reading …

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு காவல் நீட்டிப்பு!

Comments Off on தெலுங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு காவல் நீட்டிப்பு!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின் விசாரணைக் காவல் மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி டில்லி மதுபான கொள்கை பண மோசடி விவகாரத்தில் தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கவிதாவை கைது […]

Continue reading …

கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

Comments Off on கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Continue reading …

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

Comments Off on சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 […]

Continue reading …

திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

Comments Off on திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக அறிவித்துள்ள 21 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “திமுக வேட்பாளர் தேர்வு தனக்கு மகிழ்ச்சி தரவில்லை. காங்கிரஸ் கட்சியாவது முஸ்லிம்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் வேட்பாளர் […]

Continue reading …

பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்!

Comments Off on பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்!

பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் ஏப்ரல் 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில், “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Continue reading …

திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு!

Comments Off on திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு!

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது” என்று கூறி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில், “பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு […]

Continue reading …

ராம் சரண் படத்தின் தொடக்க விழா!

Comments Off on ராம் சரண் படத்தின் தொடக்க விழா!

‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் காவியப்படைப்பான குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர அந்தஸ்தான நடிகரானார் ராம் சரண். இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார். இத்திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இப்படத்தை […]

Continue reading …

சத்குரு பேசி வெளியிட்ட வீடியோ!

Comments Off on சத்குரு பேசி வெளியிட்ட வீடியோ!

சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மஹாசிவராத்திரியிலும் டில்லியில் நடைபெற்ற மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார். சத்குரு சில நாட்களுக்கு முன் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது இது பற்றி மருத்துவர்கள் “சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்” என்று கூறினார்.  

Continue reading …