வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். திருச்சி அதிமுக கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேச்சு. திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக சார்பில் மலைக்கோட்டை பகுதி கீரைக்கடை பஜார் பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் வனிதா, மாணவரணிமாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, எம்ஜிஆர் மன்ற […]
Continue reading …திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக திரு. வே.சரவணன் இ.ஆ.ப., பொறுப்பேற்றார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்களை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (15.02.2024) ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் தெரிவித்துள்ளார்.
Continue reading …திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாஜக சார்பில் நெடுஞ்சாலையில் நாத்து நடும் வினோத போராட்டம்… புது ஆயக்குடி பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து கடந்த மூன்று நாட்களாக குளம்போல் அப்பகுதி தேங்கி காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தன்னீரை பொதுமக்கள் மீது அடித்து செல்வதால் பொதுமக்க முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Continue reading …திமுக அரசு அமைந்த பிறகு 2,500 பள்ளிகளில் ரூ.190 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது: அமைச்சர் பெரியசாமி. திமுக அரசு அமைந்த பிறகு 2,500 பள்ளிகளில் ரூ.190 கோடியில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 2500 பள்ளி கட்டிடங்களில் 2,300 பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதாக அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். நிதி ஆதாரம் இல்லாததால் சீரமைப்பு செய்யும் நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடிக்காமல் சீரமைப்பு பணி செய்கிறோம் […]
Continue reading …வண்டியூர் அருகே பாஜக நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் பெயர் சக்திவேல் என்பதாகும். இவர் ஒ.பி.சி பிரிவு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவர் வண்டியூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் துரத்திக்கொண்டு வந்த நபர்கள் சக்திவேலை அரிவாளால் வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சக்திவேல் […]
Continue reading …திருச்சி பொன்மலைப்பட்டியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981, 1982 வது ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் மூன்றாம் ஆண்டு மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் தனியார் திருமண மண்டபத்தில் பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமையான இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி […]
Continue reading …அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி. நடிகை கவுதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், நடிகை கவுதமி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
Continue reading …மலைவாழ் மக்களுடன் சந்திப்பு: கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பிரசாரபயணம். பிளாஸ்டிக்கை ஒழிப்பதே லட்சியம் என உறுதிமொழி. கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 50 பேர் ஊட்டி மலை வாழ் மக்கள், நகர்ப்புற மக்கள் ஆகியோரை சந்தித்து மக்களின் மத்தியில் பிளாஸ்டிக் பையை அறவே ஒழித்து வரும் காலங்களில் அனைவரும் மஞ்சள் நிற பையை பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஐந்து நாள்கள் பிரச்சார விழிப்புணர்வுக்காக திருச்சி மத்திய இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டனர். மாணவ மாணவிகள் […]
Continue reading …நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். திருச்சி மத்திய மாவட்ட சார்பில் திமுக செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற […]
Continue reading …50 சதவீதம் கட்டுமானம் குறைவு- தொழிலாளர்கள் வேலையிழப்பு : கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கண்டித்து ஒரு நாள் வேலைநிறுத்தம். அகில இந்திய கட்டுனர் சங்கம் அறிவிப்பு அகில இந்திய கட்டுநர் சங்கத்தின்மாநில அளவிலான கூட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சியில் இன்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை காண்டிராக்டர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு, திருச்சி மைய சேர்மன் சுப்பிரமணி, மாநில செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன், […]
Continue reading …