Home » Entries posted by Ramesh M (Page 48)
Entries posted by Vaalmihi

தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா?: சீமான் ஆவேசம்

Comments Off on தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா?: சீமான் ஆவேசம்
தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா?: சீமான் ஆவேசம்

சென்னை, ஏப்ரல் 29 காவிரி மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்து, காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா என நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டனம். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவரும் வேளையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தவோ , ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களை வறுமை, பசிக்கொடுமையிலிருந்து மீட்டெடுக்கவோ உருப்படியான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்காத […]

Continue reading …

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி

Comments Off on காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி

சென்னை, ஏப்ரல் 29 மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, காவிரி நதி நீர்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கான நியாயமான தண்ணீரைப் பெறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.           ஆனால், வாரியம் என்ற பெயரை ஏற்க மறுத்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்துடன் போராடி தண்ணீர் பெறுவதைவிட, இந்த ஆணையத்தின் மூலமாக நமது தேவைகளை ஓரளவு பெற […]

Continue reading …

தலைவெட்டி சந்துருவை கொன்றது யார்..?

Comments Off on தலைவெட்டி சந்துருவை கொன்றது யார்..?
தலைவெட்டி சந்துருவை கொன்றது யார்..?

திருச்சி,ஏப்ரல் 28வால்மீகி சந்திரமோகன் என்ற தலைவெட்டி சந்துரு இவன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடியாக இருந்து சட்டவிரோத செயல் அனைத்தையும் செய்து வந்துள்ளான். சமீபத்தில் ஸ்ரீரங்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனை இவன் அனுமதியுடன் தான் நடந்துள்ளதாம். அதேபோல் இன்னும் பல சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டு அடிக்கடி வழக்குகளில் சிக்கி சிறை சென்று வருவதுண்டாம். திருச்சி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் இவன் மீது உள்ளன. சிறிது […]

Continue reading …

ஊரடங்குக்கு மத்தியில் கோதுமை அறுவடை

Comments Off on ஊரடங்குக்கு மத்தியில் கோதுமை அறுவடை

புது டெல்லி, ஏப்ரல் 28 ஊரடங்குக்கு இடையேயும், கோதுமை அறுவடை நாடு முழுவதும் விறுவிறுப்பான வேகத்தில் தொடர்கிறது. நடப்பாண்டு அறுவடையின் போது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் அரசின் நிலையான இயக்க நடைமுறை பின்பற்றப்படுகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கொரானா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்திய அரசின் வேளாண்மைத் துறை, மற்றும் விவசாயிகள் கூட்டுறவு நலத்துறை, ஆகியவை இணைந்து மாநிலங்களுக்கு நிலையான இயக்க நடைமுறை (SOP) குறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மாநிலங்கள் அறிவித்தபடி, கோதுமைப் பயிரின் அறுவடை மத்தியப்பிரதேசத்தில் 98 முதல் 99 சதவீதம், ராஜஸ்தானில் 92 […]

Continue reading …

வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் பிரபாகரனை இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்!

Comments Off on வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் பிரபாகரனை இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்!
வரனே அவசியமுண்ட திரைப்படத்தில் பிரபாகரனை இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்!

சென்னை,  ஏப்ரல் 27 துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள  “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், […]

Continue reading …

குடும்ப வன்முறை: பெண்களுக்கு உதவும் சமூக நலத்துறை!

Comments Off on குடும்ப வன்முறை: பெண்களுக்கு உதவும் சமூக நலத்துறை!
குடும்ப வன்முறை: பெண்களுக்கு உதவும் சமூக நலத்துறை!

சென்னை,  ஏப்ரல் 26 உயிர் கொல்லி நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தி இல்லாதொழித்திட நாடு முழுவதும் 24.03.2020 முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், தனித்திருக்க வேண்டும், விழிப்பாய் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரால் அறிவுரை வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள் முழுவீச்சில் களப்பணியாற்றி வருகின்றன. வீட்டில் முடங்கி கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் […]

Continue reading …

புதுச்சேரி : ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் கற்பதற்குத் தடையில்லை!

Comments Off on புதுச்சேரி : ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் கற்பதற்குத் தடையில்லை!
புதுச்சேரி : ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் கற்பதற்குத் தடையில்லை!

புதுச்சேரி, ஏப்ரல் 25 மார்ச் 25 முதல் ஊரடங்கு என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு முன்பே புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. கல்வியாண்டின் இறுதி என்பதால் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு இருக்கவில்லை. 10ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட முடியாமல் நின்று விட்டது.  இத்தகையச் சூழலில் மாணவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. புதுச்சேரி அரசு இந்தப் பிரச்சனையை கவனத்தில் கொண்டு அனைத்து பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் தொடர்பு […]

Continue reading …

கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?

Comments Off on கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?
கொரானா வந்தாலும் பரவாயில்லை ! மக்கள் நல்லாயிருக்கனும் யார் அந்த அமைச்சர்..?

திருச்சி, ஏப்ரல் 23 வால்மீகி உலக முழுவதும் கொரானா பயம் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் மட்டும் அது தினம் தினம் பொதுமக்களை மரண பீதியில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் மக்களை கொரானா பிடியில் இருந்து மீட்க பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதேபோல் சுகாதாரதுறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை போன்ற துறைகள் எல்லாம் முழு வீச்சில் இறங்கி சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கொரானாவை விரட்டி மக்களை மீட்கும் பணியில் […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன்

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன்
கொரோனாவால் பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன்

சென்னை  : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியிலிருக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. தலைநகர் சென்னையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடங்கி கிராமப்புற செவிலியர்கள் வரை வித்தியாசமின்றி இந்தத் தொற்றுக்கு ஆளாகும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசு கவனித்து, அதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு […]

Continue reading …

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியக் கடற்படை கப்பல்!

Comments Off on கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியக் கடற்படை கப்பல்!
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியக் கடற்படை கப்பல்!

கர்வாரில் உள்ள இந்திய கடற்படையின், மருத்துவமனையான பதஞ்சலி,  உத்தர கன்னட மாவட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, கொவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கிறது. கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் முதல் குழுவை வரவேற்க, 24 மணி நேரத்தில் அனைத்து விதத்திலும் இந்தியக் கடற்படையின் கப்பல் மருத்துவமனையான பதஞ்சலி தயார்படுத்தப்பட்டது. இது வரை அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஒன்பது நோயாளிகளின் பராமரிப்பை, மூன்று மருத்துவர்கள், ஒன்பது மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஒன்பது ஆதரவுப் பணியாளர்களைக் […]

Continue reading …