கொரோனா வைரஸ் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மூன்றாம் கட்டம் மற்றும் நான்காம் கட்டத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த தருணத்தில் நாளை முதல் தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. இயங்குவதற்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்கலாம். ஆட்டோவில் ஓட்டுனர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டும் அனுமதி. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்கலாம் மற்றும் நோய் கட்டுப்பாடு இடங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது.