வண்டியூர் அருகே பாஜக நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் மதுரையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் பெயர் சக்திவேல் என்பதாகும். இவர் ஒ.பி.சி பிரிவு மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவர் வண்டியூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் துரத்திக்கொண்டு வந்த நபர்கள் சக்திவேலை அரிவாளால் வெட்டி சாய்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.