மதுரை மக்களவைத் தேர்தலில் 328 வாக்குச்சாவடிகளில் பாஜக முதலிடம்.
மதுரை லோக்சபா தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே. பி. ராமலிங்கம், ” மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக 2வது இடம் பெற்றுள்ளது. எதிர்பாராத வகையில் 328 ஓட்டுச் சாவடிகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
மதுரை அதிமுக, கோட்டை என்பதை தாண்டி, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என கட்சி எடுத்த முடிவுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று கூறினார்.