கொரோனா வைரஸை தடுக்க paytm மூலம் பேருந்து பயணச்சீட்டு – புதிய முயற்சி!

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியது: 60% பயணிகளை கொண்டு 5669 பேருந்துகள் இன்று முதல் கட்டமாக இயக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு முயற்சியாக இரண்டு பேருந்துகளில் Paytm வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Paytm இல்லாதவர்கள் பணம் அளித்து பயணச்சீட்டு வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயங்கும் மற்றும் தனியார் பேருந்துகளை இயக்குவது பற்றி ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். பயணச்சீட்டு கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை பழைய கட்டணம் முறையிலேயே பயணச் சீட்டு வழங்கப்படும். பின்னர் மாதம் பயண அட்டை நடைமுறை இருக்கும் என்றார்.