Home » Archives by category » அரசியல்

கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

திமுக எம்.பி. கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது என மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ பதில் அளித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி நிலையின் விபரங்கள் குறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ, ‘மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் […]

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவிக்கு பிரேமலதா எதிர்ப்பு!

Comments Off on உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவிக்கு பிரேமலதா எதிர்ப்பு!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் இன்று மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்குப் பின் […]

Continue reading …

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது! துரைமுருகன் வலியுறுத்தல்!

Comments Off on மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது! துரைமுருகன் வலியுறுத்தல்!

தமிழக அமைச்சர் துரைமுருகன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாய சங்கங்களும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை […]

Continue reading …

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Comments Off on மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட […]

Continue reading …

நிர்வாகிகளுக்கு இபிஎஸ்ஸின் அறிவுறுத்தல்!

Comments Off on நிர்வாகிகளுக்கு இபிஎஸ்ஸின் அறிவுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி “திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள், அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி […]

Continue reading …

செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பான வாதம்!

Comments Off on செந்தில் பாலாஜி வழக்கில் பரபரப்பான வாதம்!

நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது பரபரப்பான வாதம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் முதலில் இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? -என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி கேட்டனர். அதற்கு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

Comments Off on பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார். முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள், நேற்றைய பட்ஜெட் பாஜக ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள், இன்னமும் […]

Continue reading …

போராட்டம் செய்த முதலமைச்சர்; கர்நாடகாவில் பரபரப்பு!

Comments Off on போராட்டம் செய்த முதலமைச்சர்; கர்நாடகாவில் பரபரப்பு!

  அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் திடீரென போராட்டம் நடத்தியதில் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மிகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஊழலில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சம்பந்தபடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சித்தராமையா திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு […]

Continue reading …

பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

Comments Off on பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது என்றும் கூட்டாளிகளை சமாதானப்படுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். குறிப்பாக ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கிடப்பில் உள்ள […]

Continue reading …

பட்ஜெட் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்!

Comments Off on பட்ஜெட் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்!

  நடிகர் பிரகாஷ்ராஜ் ஆந்திரா, பீகாரை தவிர மற்ற மாநிலங்களுக்கு அல்வா தான் என்று மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் […]

Continue reading …
Page 1 of 201123Next ›Last »