டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டில்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமினை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் அவர் சிறைக்கு சென்றார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் […]
Continue reading …விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் 14ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமானதால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஜூலை 10ம் தேதி […]
Continue reading …தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது கூட கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவம் நடந்தது என சட்டப்பேரவையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கள்ளச்சாராய விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாதபடி வலுவான சட்டம் உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தியவர்கள் இப்போது மக்களுக்காக பேசுகிறார்கள், அடுத்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் […]
Continue reading …அமைச்சர் மா.சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலர் உயிரிழந்தற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் அருந்திய 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பெண்கள் உட்பட 48 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புதுச்சேரி சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின் பேசிய அவர், விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனை […]
Continue reading …தமிழகத்தை கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் இச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திரையுலகை பொருத்தவரை விஜய், சரத்குமார், பா.ரஞ்சித், தங்கர் பச்சான், விஷால், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் கண்டனமும் இனிமேல் இது மாதிரி நடக்காத வண்ணம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் […]
Continue reading …தற்போது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து நடிகர், இயக்குனர் தங்கர்பச்சான், “மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக! வள்ளலார் இராமலிங்க அடிகளார் மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் […]
Continue reading …பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 37 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக அரசே காரணம், தமிழகத்தில் அதிகமாக விதவைகளை உருவாக்கும் மாடலாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம், “இத்தனை பேர் பாதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இவையெல்லாம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்பது […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க ஏன் இன்னும் இங்கு வரவில்லை? வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடைபெறுகிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். பிரேமலதா கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம், “கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று முதலமைச்சர் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினர் […]
Continue reading …அமைச்சர் அன்பில் மகேஷ் “எனது அம்மா கண்டிப்புடன் வளர்த்ததால், தான் இன்றும் நான் வீட்டிற்கு நுழைந்தவுடன் கை கால்களை கழுவி விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பேன். அதைப்போல, சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டும்”என காணொளி வாயிலாக மாணவர்களிடம் பேசினார். இன்று மதுரை பாரபத்தி கிராமத்தில் ரோட்டரி பவுண்டேஷன் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 அரசு பள்ளிகளில் அறம் சுகாதார மையம் திறக்கும் விழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் […]
Continue reading …