காங்கிரஸ் கட்சியின் பிரபலமான ஜெய்ராம் ரமேஷ் குலாம் நபி ஆசாத் துரோகம் செய்து விட்டதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான குலாம்நபி ஆசாத் இன்று காலை அறிவித்திருந்தார். அவரது விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமை உயர் மரியாதையுடன் நடத்தப்பட்ட நபர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத் என்றும் அவர் இப்போது உண்மை முகத்தை காட்டி கட்சிக்கு துரோகம் […]
Continue reading …நம் நாட்டின் பிரதமர் மோடி உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு, உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், பிரதமர் நரேந்திரமோடி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடம் பிடித்திருந்தார். இந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், மோடியின் […]
Continue reading …கடந்த சில மணி நேரங்களாக திடீரென வலைதளங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்த வதந்தி பரவி உள்ளது. இதுபற்றி பிரேமலா விளக்கம் அளித்துள்ளார். விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து சற்றுமுன் திடீரென இணைய தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா “விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை பற்றி தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். […]
Continue reading …நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் வெற்றி பெற்றுள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை […]
Continue reading …தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் வீட்டில் சிபிஐ சோதனை நடந்துள்ளது. கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. மேலும் டில்லி துணை முதலமைச்சர் வீட்டில் நடந்த சோதனையையடுத்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக […]
Continue reading …திமுக அரசை குறை கூறியும், புதுச்சேரி அரசை பாராட்டியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. புதுச்சேரி மாநில பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி, “குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி […]
Continue reading …தாய்லாந்தில் இருக்கும் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் போராட்டம் பெரிய அளவில் இலங்கையில் நடந்ததையடுத்து இலங்கையிலிருந்து தப்பித்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு மாதம் சிங்கப்பூரில் இருந்த அவர் தற்போது தாய்லாந்துக்கு தஞ்சம் புகுந்துள்ளார். தாய்லாந்து அரசு கோத்தபாய ராஜபக்சவை தற்காலிகமாக தங்க அனுமதித்துள்ளது என்றும், அதிகபட்சமாக 90 நாட்கள் அவர் தங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. […]
Continue reading …கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் “ஓரு நாள் கூரை மேல் இருந்து சேவல் கூவும்! அப்போது அதிகாரம் கைக்கு வரும்!” என்று சீமான் பேசியுள்ளார். இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம் கடை கோடியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அது தான் இலவசம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை நிலத்தை இந்திய […]
Continue reading …அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகராமாகிக் கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, கொஞ்சம்கூட யோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் ஒற்றை தலைமை பிரச்சனையை கிளப்பி, அனைத்துவிதமான பிளான்களையும் இவர்களே தவிடுபொடியாக்கிவிட்டனர் என்ற சலசலப்புகள் அதிமுகவுக்குள் இன்னும் அதிகமாகவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. அதேசமயம், இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகமும் தொண்டர்களுக்குள் எழுந்துள்ளது. அதிமுகவில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை […]
Continue reading …அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விமான நிலையம் அமைக்காவிட்டால் சென்னையின் வளர்ச்சி தேக்கமடையும் என்று கூறியுள்ளார். புதிதாக சென்னையில் விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் பல மடங்கு வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “2028ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் […]
Continue reading …