Home » Archives by category » அரசியல் (Page 168)

திரவுபதி முர்மு பதவியேற்பு!

Comments Off on திரவுபதி முர்மு பதவியேற்பு!

திரவுபதி முர்மு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பதவியேற்ற பின் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகளை குறிப்பிட்டார். குறிப்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரை குறிப்பிட்டார். “வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ஆகியோர்கள் புதிய உயரங்களை அளித்துள்ளனர். மேலும் உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும். கோடிக்கணக்கான நாட்டு மக்களின் […]

Continue reading …

அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Comments Off on அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழக அரசு மின்சார மீட்டருக்கும் ரூபாய் 350 வாடகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ள அறிக்கையில், “மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது. இது […]

Continue reading …

ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த ஜெயகுமார்!

Comments Off on ஓ.பன்னீர்செல்வத்தை கிண்டல் செய்த ஜெயகுமார்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓ.பன்னீர்செல்வத்தை “ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறார்” என கிண்டலடித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுகவினர் யாரும் இல்லை. ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ பன்னீர்செல்வம் ஆட்களை நியமித்து வருகிறார்” அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி அவர் கூறும்போது, “திமுக அரசு ஆட்சிப் […]

Continue reading …

ஷாக் கொடுக்கின்ற ஓபிஎஸ்!

Comments Off on ஷாக் கொடுக்கின்ற ஓபிஎஸ்!

சென்னை மண்டல ஆர்பிஐ இயக்குநருக்கு அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்குமாரு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடமுள்ளது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் […]

Continue reading …

கருணாநிதி பேனாவுக்கு மெரினா நடுவில் சிலை!

Comments Off on கருணாநிதி பேனாவுக்கு மெரினா நடுவில் சிலை!

கருணாநிதியின் பேனாவுக்கு மெரினா கடலின் நடுவே ரூ.80 கோடியில் சிலை வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வடிவத்தில் மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் […]

Continue reading …

தமிழருவி மணியன் கட்சி பெயர் மாற்றம்!

Comments Off on தமிழருவி மணியன் கட்சி பெயர் மாற்றம்!

தமிழருவி மணியன் திடீரென தனது கட்சியின் பெயரான காந்திய மக்கள் இயக்கம் என்பதை மாற்றுவதாக தெரிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சி இனி காமராஜர் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர செய்வதற்காகவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் தீவிர அரசியலில் நுழைய இருப்பதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழருவி மணியன் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அதன் பின்னர் […]

Continue reading …

அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Comments Off on அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தயிருக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5% ஜி.எஸ்.டி குறித்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் கூறும் போது, “தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான விலை உயர்வு நியாயமற்றது; அதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் […]

Continue reading …

திரவுபதி முர்மு குடியரசு தலைவராகிறார்!

Comments Off on திரவுபதி முர்மு குடியரசு தலைவராகிறார்!

திரவுபதி முர்மு 70 சதவீதம் வாக்குகள் பெற்று குடியரசு தலைவராகிறார். இன்று காலை 11 மணி முதல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்மு முன்னிலையில் இருக்கிறார். சற்று முன் வெளியான தகவலின்படி மூன்றாம் சுற்று முடிவில் திரவுபதி முர்மு 70 சதவீத வாக்குகளை பெற்று உள்ளதால் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டதாக […]

Continue reading …

அதிமுக அலுவலகம் எடப்பாடியின் வசம்!

Comments Off on அதிமுக அலுவலகம் எடப்பாடியின் வசம்!

எடப்பாடி பழனிசாமியிடம் சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதிமுக அலுவலகத்தை கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற பொழுது ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகிய தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரு தரப்பிலிருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

Continue reading …

எச்.ராஜா கடும் விமர்சனம்!

Comments Off on எச்.ராஜா கடும் விமர்சனம்!
எச்.ராஜா கடும் விமர்சனம்!

எச்.ராஜா பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி ஜிஆர் வைத்தியநாதன் அவர்கள் உத்தரவிட்டார். சவுக்கு சங்கர் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. “சவுக்கு சங்கர் ஒரு டேட்டா திருடன். இந்த டேட்டா திருடன், விசாகா கமிட்டி முன்பு பாலியல் குற்றச்சாட்டு எதிர கொண்டு வருபவன் ஆதாரமின்றி அனைவரையும் விமரிசிப்பவன் […]

Continue reading …