பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதிமுகவின் எந்த அணிக்கும் சப்போர்ட் இல்லை என்று கூறியுள்ளார். அதிமுக உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த பொதுக்குழுவே செல்லாது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. பொதுக்குழு கூட்டத்தன்று ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே […]
Continue reading …காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து பாதயாத்திரையை தொடங்குவதாகவும் 148 நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். இப்பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றும் […]
Continue reading …இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக சேர்ந்தவர்கள் ஒரு சிலர் ஏற்கனவே தமிழ்நாட்டை தமிழ்நாடு, கொங்குநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “தனித்தமிழ்நாடு என்ற பிரிவினை வாதம் தவறானது. ஆனால், நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்றாக […]
Continue reading …மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கவர்னர் ரவி அவர்கள் மாணவர்களிடையே அரசியலைப் பரப்புவார் என்ற சந்தேகம் இருப்பதால் புறக்கணிப்பதாக தகவல் அளித்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளார்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “மதுரை காமராஜர் பல்கலைப் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் இணைவேந்தரான எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் வேந்தரான ஆளுனர் அறிவித்துள்ளார். மேலும், கவர்னர் அலுவலகத்திலிருந்து இணைவேந்தரான என்னிடம் கேட்க வேண்டும், அவரது அலுவலராவது கேட்டிருக்கலாம், கவுரவ […]
Continue reading …சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சமீபத்தில் ராகுல் காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனுக்கு ராகுல்காந்தி ஆஜர் ஆனார். ஆனால் சோனியா காந்தி கொரோனா வைரஸ் நோய் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. தற்போது சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடவே, வரும் 21ம் தேதி சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் […]
Continue reading …பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை கூட்டணி கட்சி தலைவராக ஏற்று கொண்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்திய ராமதாஸ், “பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர், ராமதாஸ் அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Continue reading …லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் வருமானத்திற்கும் அதிகமான சொத்துகளை வாங்கி குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக கடந்த 2011ல் அதிமுக ஆட்சி அமைத்தது முதலாக 2021 வரை பதவி வகித்தவர் மன்னார்குடியை சேர்ந்த காமராஜ். மூன்று முறை நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர். கடந்த 2015&-16ம் ஆண்டில் தற்காலிக அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த […]
Continue reading …அதிமுவின் பொதுச் செயலாளராக நான் தான் தற்போது இருந்து வருகிறேன் என்று சசிகலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒற்றைத்தலைமை குறித்து அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாடு முழுதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சசிகலா தற்போது நான் தான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். “அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டபடி நான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் […]
Continue reading …திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்து மோதல் நிலவி வருகிறது. இதற்கு முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். வரும் திங்கள்கிழமை (11.07.2022) அன்று மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை வானகரத்தில் […]
Continue reading …தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தேமுதிக கட்சியில் உட் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார். தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் பணி குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பணிக்குழுவினர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்த்தல் நடத்தும் ஆணையாளராக நியமிக்கப்படுகிறார்கள். கழக அமைப்பு தேர்தல் குக்கிராமங்களில் உள்ள ஒன்றிய ஊராட்சி வாரியாக பூத் கிளை கழகங்கள் துவங்கி, ஊராட்சி கழகம், பேரூர் வார்டு கழகம், நகர வார்டு பூத் […]
Continue reading …