Home » Archives by category » அரசியல் (Page 25)

சீதைக்கும் ஒரு கோவில்; அமித்ஷா வாக்குறுதி!

Comments Off on சீதைக்கும் ஒரு கோவில்; அமித்ஷா வாக்குறுதி!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டியதை போல் சீதைக்கும் ஒரு தனியாக கோயில் கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது ராமர் கோவில் கட்டுவோம் என பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு அயோத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ராமர் கோவில் திறக்கப்பட்டது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பல வாக்குறுதிகள் பாஜக […]

Continue reading …

அமைச்சர் அன்பில் மகேஷ் – இளையராஜா சந்திப்பு!

Comments Off on அமைச்சர் அன்பில் மகேஷ் – இளையராஜா சந்திப்பு!

இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்ததாக அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவில் அவர், “தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று […]

Continue reading …

நடிகர் மன்சூர் அலிகானின் பதிவு வைரல்!

Comments Off on நடிகர் மன்சூர் அலிகானின் பதிவு வைரல்!

நடிகர் மன்சூர் அலிகான் சமூக வலைதளங்களில், “மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..! அதையும் தாண்டி கொடூரமானது!” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். வேலூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய […]

Continue reading …

அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றத்தின் செக்!

Comments Off on அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றத்தின் செக்!

அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு நிபந்தனை விதித்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை […]

Continue reading …

பாஜகவுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

Comments Off on பாஜகவுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கிழித்து எறிய முயற்சித்தால், நாடும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை என்ன செய்யும் என்பதை பாருங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம் பலங்கிரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழை பொது […]

Continue reading …

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்!

Comments Off on இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்!

மத்திய அரசு இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது முதல் கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 2014ம் ஆண்டுக்கு முன்பு வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு […]

Continue reading …

எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

Comments Off on எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

பாஜகவின் எச்.ராஜா பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2018ல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் […]

Continue reading …

பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!

Comments Off on பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக ஆட்சி இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. 3வது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2 தேர்தல்களிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மூன்றாவது முறையும் வாரணாசி தொகுதியிலேயே களமிறங்குகிறார். இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக புனித நதியான கங்கையில் பிரதமர் மோடி நீராடி பிரார்த்தனை செய்து சிறப்பு […]

Continue reading …

பங்குச்சந்தை குறித்து பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

Comments Off on பங்குச்சந்தை குறித்து பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போதே பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் ஜூன் 4-க்குப் பிறகு வாங்க முடியாது என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தேர்தல் முடிவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருவதால் பாஜக தோல்வியடைய வாய்ப்பிருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் […]

Continue reading …