Home » Archives by category » அரசியல் (Page 28)

டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் நீக்கம்!

Comments Off on டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் நீக்கம்!

டில்லி மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். ஆளுநர் அலுவலகத்திலிருந்து டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகவும், ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் விதிகளுக்கு மீறியிருப்பதால் டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா […]

Continue reading …

அமைச்சரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி!

Comments Off on அமைச்சரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி!

பொதுமக்கள் கேரளாவில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஒருவர் “முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஏசி இருந்தது ஆனால் இப்போது வீட்டுக்கு நான்கு ஏசி உள்ளது அதனால் தான் மின்தடை ஏற்பட்டது” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மின்தடை குறித்து கூறும்போது, “மின்சாரம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு ஏசி இருந்த […]

Continue reading …

அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து!

Comments Off on அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் அஜீத் குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜீத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்தின் “தீனா” உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். நடிகர் அஜீத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், […]

Continue reading …

துரைமுருகனுக்கு பிரேமலதா கேள்வி!

Comments Off on துரைமுருகனுக்கு பிரேமலதா கேள்வி!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னை மூத்த அமைச்சர் என சொல்லி கொள்ளும் துரைமுருகன் மேகதாது விவகாரதில் என்ன நிர்வாகம் செய்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கிய பின் செய்தியாளர்களிடம், “இதுவரை எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம், ஆனால் இம்முறை வாக்கு சதவீதம் அறிவிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. கடைசியில் 69 […]

Continue reading …

ஜெயக்குமார் அதிரடி.!

Comments Off on ஜெயக்குமார் அதிரடி.!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ள பாடத்தை நீக்குவோம் என தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம், “மே தினம் தொழிலாளர் வர்க்கத்தினரின் தியாகத்தால் உருவானது எனவும் தொழிலாளர்கள் நலனைக் காத்தவர் எம்ஜிஆர். திமுக அரசு தொழிலாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடித்துக் கொண்டு வருவதாகவும் திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் அஜீத்குமாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர்களில் தைரியமாக செயல்படக்கூடியவர் அஜீத்குமார். […]

Continue reading …

பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ராகுல் கேள்வி!

Comments Off on பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ராகுல் கேள்வி!

பிரதமர் மோடி பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களில் கர்நாடகாவின் ஹாசன் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் பரவி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூரமான குற்றங்கள் குறித்து நரேந்திர மோடி பேசாமல் எப்போதும் போல் மவுனம் காத்து வருகிறார். இது குறித்து […]

Continue reading …

முதலமைச்சரின் இரண்டு அறிவுரைகள்?

Comments Off on முதலமைச்சரின் இரண்டு அறிவுரைகள்?

நேற்று ஓய்வு எடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அதற்கு முந்தைய நாள் கோட்டைக்கு சென்று சில முக்கிய ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அதிகாரிகளுடன் தமிழகத்தில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கிறதா? அதேபோல் மின்தடை ஏற்படாமல் கோடையை சமாளிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சில அறிவுரைகளையும் கூறிவிட்டு முதல்வர் கொடைக்கானல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி என்பதால் கோட்டைக்கு […]

Continue reading …

பிரதமர் மோடி பெருமிதம்!

Comments Off on பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சிக்கும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை 10 ஆண்டுகளில் பாஜக சாதித்துள்ளது. ரயில்வே, சாலைவசதி மற்றும் விமானநிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்புக்கான பாஜகவின் ஆண்டு பட்ஜெட், […]

Continue reading …

தங்கர் பச்சான் வீடியோ வைரல்!

Comments Off on தங்கர் பச்சான் வீடியோ வைரல்!

இயக்குனர் தங்கர் பச்சான் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே கிடையாது, ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். பாமக வேட்பாளராக கடலூர் தொகுதியில் நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெறுவாரா என்பது ஜூன் 4ம் தேதி தான் தெரியும். அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் “கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். […]

Continue reading …

மெரினா கடற்கரையில் சுதந்திர தின அருங்காட்சியகம்!

Comments Off on மெரினா கடற்கரையில் சுதந்திர தின அருங்காட்சியகம்!

தமிழக அரசு சென்னையில் மெரினா கடற்கரை எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் பிரம்மாண்டமாக அமைய இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழக அரசு சென்னையில் மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் அருங்காட்சியகம் அமைகிறது, இந்த அருங்காட்சியகத்தில் வைக்க பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால பொருட்களை வழங்கலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் கையெழுத்து பிரதி, பழங்கால ஆவணம், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகளை வழங்க அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு பொருட்கள் நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் […]

Continue reading …