Home » Archives by category » அரசியல் (Page 34)

திமுக டெபாசிட் இழக்கும்; அண்ணாமலை!

Comments Off on திமுக டெபாசிட் இழக்கும்; அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக டெபாசிட் இழக்கும் முதல் தொகுதி கோவையாகத்தான் இருக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருவருமே அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் மைக்கை […]

Continue reading …

கவிதா விசாரணை; நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

Comments Off on கவிதா விசாரணை; நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் கவிதா ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை செய்தபோது டில்லி மதுபான கொள்கை முறைகேட்டில் விசாரணைக்கு […]

Continue reading …

நெல்லையில் ராகுல் காந்தி அறிவிப்பு!

Comments Off on நெல்லையில் ராகுல் காந்தி அறிவிப்பு!

காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி. நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், “தமிழ்நாட்டில் உள்ள மீனவர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மோடி நிதிதர மறுத்துவிட்டார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு […]

Continue reading …

அண்ணனுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய சண்முக பாண்டியன்!

Comments Off on அண்ணனுக்காக பிரச்சாரத்தில் இறங்கிய சண்முக பாண்டியன்!

விஜய பிரபாகரன் தம்பி சண்முக பாண்டியனுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திறந்த வேனில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்‌. முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சண்முக பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து திறந்த ஜீப்பில் […]

Continue reading …

காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து; மோடி வாக்குறுதி!

Comments Off on காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து; மோடி வாக்குறுதி!

பிரதமர் மோடி ஸ்ரீநகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், “காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அது மட்டுமின்றி விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும்” வாக்குறுதி அளித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து பிரதமர் மோடி சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் “புதிய ஜம்மு காஷ்மீரை உருவாக்க நான் மும்முரமாக இருக்க வேண்டும். […]

Continue reading …

நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Comments Off on நிர்மலா சீதாராமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதலமைச்சரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூர் ராம்நகரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி மற்றும் […]

Continue reading …

ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகிகள் அதிருப்தி?

Comments Off on ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகிகள் அதிருப்தி?

ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருடைய ஆதரவாளர்கள் தமிழகம் முழுதும் இருக்கும் நிலையில் ஆங்காங்கே அந்தந்த தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு அவர்கள் வாக்கு சேகரிக்காமல் ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் குவிந்து […]

Continue reading …

காங்கிரசை சாடிய ஜே.பி.நட்டா!

Comments Off on காங்கிரசை சாடிய ஜே.பி.நட்டா!

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது என்று தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் தேர்தல் பிரச்சாரத்தில், “முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது. காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை. ஆனால், தற்போது பிரதமர் மோடி […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் காரில் பறக்கும் படை சோதனை!

Comments Off on உதயநிதி ஸ்டாலின் காரில் பறக்கும் படை சோதனை!

பறக்கும் படையினர் தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் சோதனை மேற்கொண்டனர். வருகிற 19-ந் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் […]

Continue reading …

நாளை 5-ம் கட்ட பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி!

Comments Off on நாளை 5-ம் கட்ட பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி!

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர். 5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 23-ம் தேதி […]

Continue reading …