Home » Archives by category » அரசியல் (Page 43)

அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி!

அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மதுபான கொள்கையில் மூளையாக செயல்பட்டதாகவும், கொளை மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாகவும், அப்பணத்தில்தான் கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தபப்ட்டது என குற்றம் சாட்டிருந்தது. இவ்வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர். அவருக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராக மறுத்த நிலையில், “நேரில் […]

Continue reading …

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு காவல் நீட்டிப்பு!

Comments Off on தெலுங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகளுக்கு காவல் நீட்டிப்பு!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின் விசாரணைக் காவல் மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி டில்லி மதுபான கொள்கை பண மோசடி விவகாரத்தில் தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கவிதாவை கைது […]

Continue reading …

கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

Comments Off on கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி; எஸ்.பி. வேலுமணி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையை பொருத்தவரை அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமாரும், பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். கோவையில் இன்று நடைபெற்ற அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் […]

Continue reading …

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

Comments Off on சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு; எடப்பாடி கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 […]

Continue reading …

திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

Comments Off on திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக அறிவித்துள்ள 21 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “திமுக வேட்பாளர் தேர்வு தனக்கு மகிழ்ச்சி தரவில்லை. காங்கிரஸ் கட்சியாவது முஸ்லிம்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் வேட்பாளர் […]

Continue reading …

திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு!

Comments Off on திமுக கூட்டணிக்கு கருணாஸ் ஆதரவு!

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் “பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது” என்று கூறி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில், “பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு […]

Continue reading …

பிரதமர் மோடிதான் பள்ளி வழியாக சென்றார்!

Comments Off on பிரதமர் மோடிதான் பள்ளி வழியாக சென்றார்!

பள்ளி மாணவர்கள் கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் விசாரணையில் திருப்பங்கள் நடந்துள்ளது. சமீப காலமாக மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்கிறார். சமீபத்தில் அவர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரை வரவேற்க ‘ரோடு ஷோ’ நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் பலரும் சீருடையோடும், அனுமார் உள்ளிட்ட வேடங்கள் அணிந்தும் காத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேர்தல் […]

Continue reading …

ராஜ்ய சபா சீட் உறுதி; பிரேமலதா!

Comments Off on ராஜ்ய சபா சீட் உறுதி; பிரேமலதா!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக அதிமுக உறுதி அளித்துள்ளதாகவும், வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி, பின் பிரேமலதாவுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “அதிமுக கூட்டணி சார்பில் மார்ச் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற […]

Continue reading …

தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Comments Off on தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதிமுக சார்பில் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் அறிவித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் […]

Continue reading …

பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை!

Comments Off on பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை!

தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் அவர் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார். மீண்டும் பாஜகவில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியது. நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை விளக்கமளித்தார். சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான […]

Continue reading …