Home » Archives by category » அரசியல் (Page 7)

குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள விருது!

Comments Off on குமரி அனந்தனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள விருது!

தமிழக அரசு தகைசால் தமிழர் விருதை குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 2021-ல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் ஆணையிட்டிருந்தார். இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட […]

Continue reading …

கர்நாடக முதலமைச்சரின் பதவி தப்புமா?

Comments Off on கர்நாடக முதலமைச்சரின் பதவி தப்புமா?

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்து புகாரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக முதலமைச்சரின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், […]

Continue reading …

ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து குற்றச்சாட்டு!

Comments Off on ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து குற்றச்சாட்டு!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மினிமம் பேலன்ஸ் இல்லை எனக் கூறி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழை மக்களிடம் இருந்து ரூ.8,500 கோடி அபராதமாக வசூலித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மக்களவையில் தெரிவித்தார். இது குறித்து ராகுல் காந்தி தனது […]

Continue reading …

வயநாட்டில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கமல் கோரிக்கை!

Comments Off on வயநாட்டில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த கமல் கோரிக்கை!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கேரளாவில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு […]

Continue reading …

திமுக குறித்து அண்ணாமலை கருத்து!

Comments Off on திமுக குறித்து அண்ணாமலை கருத்து!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர். […]

Continue reading …

கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

Comments Off on கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

திமுக எம்.பி. கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது என மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ பதில் அளித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி நிலையின் விபரங்கள் குறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ, ‘மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் […]

Continue reading …

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவிக்கு பிரேமலதா எதிர்ப்பு!

Comments Off on உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவிக்கு பிரேமலதா எதிர்ப்பு!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் இன்று மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்குப் பின் […]

Continue reading …

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது! துரைமுருகன் வலியுறுத்தல்!

Comments Off on மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது! துரைமுருகன் வலியுறுத்தல்!

தமிழக அமைச்சர் துரைமுருகன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாய சங்கங்களும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை […]

Continue reading …

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Comments Off on மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட […]

Continue reading …

நிர்வாகிகளுக்கு இபிஎஸ்ஸின் அறிவுறுத்தல்!

Comments Off on நிர்வாகிகளுக்கு இபிஎஸ்ஸின் அறிவுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி “திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள், அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்க முடியும்” என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் முதல் கட்டமாக 23 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீதமுள்ள தொகுதி நிர்வாகிகளுடன் 2-ம் கட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி […]

Continue reading …