Home » Archives by category » இந்தியா

ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா […]

அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

Comments Off on அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர். உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க […]

Continue reading …

சாண்டி உம்மன் கேரள இடைத்தேர்தலில் வெற்றி

Comments Off on சாண்டி உம்மன் கேரள இடைத்தேர்தலில் வெற்றி

மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சான்டியின் மகன் கேரளாவில் புதுப்பள்ளி தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 78,098 வாக்குகள் பெற்று, 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி கேரள மாநிலத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார். அவரது மறைவையடுத்து, புதுப்பள்ளி தொகுதிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கேரளா மட்டுமின்றி திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உபி., ஆகிய மாநிலங்களிலும் […]

Continue reading …

ரூ.600 கோடி செலவில் திருப்பதியில் தங்கும் விடுதி

Comments Off on ரூ.600 கோடி செலவில் திருப்பதியில் தங்கும் விடுதி

20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் திருப்பதியில் 600 கோடி செலவில் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் வகையில் திருப்பதியில் மையம் உள்ளது.- தற்போது புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இவ்வாண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு […]

Continue reading …

ஆதித்யா எல்- 1 எடுத்த போட்டோ!

Comments Off on ஆதித்யா எல்- 1 எடுத்த போட்டோ!

ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்துக் கொண்டுள்ளது சந்திரயான், மங்கள்யான் திட்டங்கள் மூலம் நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் கால் பதித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உலக அரங்கில் பெரும் சாதனையை படைத்து வருகிறது. அதை தொடர்ந்து அடுத்த கட்டமாக சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆதித்யா திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி சூரியன் குறித்த ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் […]

Continue reading …

குறைந்த அளவே தண்ணீர் கொடுத்த கர்நாடக அரசு!

Comments Off on குறைந்த அளவே தண்ணீர் கொடுத்த கர்நாடக அரசு!

கர்நாடக அரசுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசுடன் தமிழ்நாட்டிற்கு விவசாய பயன்பாடுகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து பிரச்னைகள் இருந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகளும் சமீபத்தில் போராட்டம் செய்தனர். எனினும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்குள் 6.48 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என முடிவு […]

Continue reading …

ஆந்திரா இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு!

Comments Off on ஆந்திரா இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு!

உத்தர பிரதேச மாநில சாமியார் உதயநிதி தலையை சீவி வந்தால் 10 கோடி என அறிவித்திருந்தார். தற்போது உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் என ஆந்திர மாநில இந்துத்துவ அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதால், கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் பரிசு தரப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உதயநிதி […]

Continue reading …

உதயநிதிக்கு மம்தா அறிவுரை!

Comments Off on உதயநிதிக்கு மம்தா அறிவுரை!

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படுத்தும் படி பேசக்கூடாது என்றும் அமைச்சர் உதயநிதிக்கு அறிவுரை கூறியுள்ளார். மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “உதயநிதி ஒரு ஜூனியர், அவர் எந்த அடிப்படையில் இக்கருத்தை கூறினார் என்று எனக்கு தெரியவில்லை, தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கை உள்ளது […]

Continue reading …

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை!

Comments Off on உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை ஒழிப்பது குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் திராவிடர் கழகம் முன்னெடுத்த ‘சனாதான ஒழிப்பு மாநாட்டில்’ கலந்து கொண்டார். அதில் அவர் சனாதானத்தை ஒழிப்பது குறித்து பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உதயநிதி தான் பேசியவற்றை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரமஹம்ச […]

Continue reading …

திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

Comments Off on திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்று எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என கைப்பட எழுதி அனுப்ப வேண்டும், அவ்வாறு எழுதி கொண்டு வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று திருப்பதி தேவஸ்தானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,01,116ம் முறை கோவிந்தா கோவிந்தா என்று எழுதி வந்தால் ஒருவருக்கு மட்டும் […]

Continue reading …
Page 1 of 131123Next ›Last »