Home » Archives by category » இந்தியா (Page 170)

ராஜீவ் கொலை வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 15-ல் விசாரணை !

Comments Off on ராஜீவ் கொலை வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 15-ல் விசாரணை !

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜூலை 15-ல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக […]

Continue reading …

நேபாளத்தில் நிலநடுக்கம்: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நில அதிர்வு !

Comments Off on நேபாளத்தில் நிலநடுக்கம்: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் நில அதிர்வு !

நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டதால் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. சென்னையில் வலசரவாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் லேசாக குலுங்கியது. தலைநகர் டெல்லி, பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும், அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதால் டெல்லி மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறினர். டெல்லியில் நில அதிர்வின் தாக்கம் குறித்து அறிக்கை […]

Continue reading …

ஜெயலலிதா விடுதலை தீர்ப்பு முழு விவரம்!

Comments Off on ஜெயலலிதா விடுதலை தீர்ப்பு முழு விவரம்!

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் […]

Continue reading …

ஆந்திர அரசின் காட்டுமிராண்டித்தனம் ! 20 ஏழைகளை சுட்டுப் பொசுக்கிய கொடுமை!

Comments Off on ஆந்திர அரசின் காட்டுமிராண்டித்தனம் ! 20 ஏழைகளை சுட்டுப் பொசுக்கிய கொடுமை!

செம்மரம் கடத்தும் தொழிலில், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவியான தொழிலாளர்களை மரம் வெட்டும் கூலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர்! செம்மரங்கள் மருத்துவ குணம் கொண்டவை என்றும், செக்ஸ் குறைபாடுகளை நீக்கும் ‘வயாக்கரா’ மருந்து தயாரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது! ஆந்திர மாநிலம் & திருப்பதியை ஒட்டிய மலையடிவாரப் பகுதியிலிருந்து வெட்டி கடத்தப்படும் மரங்கள், குறிப்பாக சீனா, ஜப்பான், மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு, கடும் […]

Continue reading …

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’!

Comments Off on 62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’!
62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் ‘குற்றம் கடிதல்’!

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் – மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய ‘குற்றம் கடிதல்’ எனும் படம், சிறந்தத் தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றுள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். ‘சைவம்’ படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. ‘ஜிகர்தண்டா’ எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. […]

Continue reading …

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் !

Comments Off on சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் […]

Continue reading …

நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம் !

Comments Off on நாடு முழுவதும் உள்ள புலிகளை இடமாற்றம் செய்ய திட்டம் !

 நாடு முழுவதும் புலிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து புலிகள் எண்ணிக்கை அதிகமுள்ள பகுதிகளில் இருந்து புலிகள் எண்ணிக்கை குறைந்த மற்றும் புலிகள் இல்லாத (வாழ்ந்து அழிந்த) பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றின் வாழிட பரப்பு குறைந்த சூழலில் ‘புலிகள் – மனிதன் மோதல்’ மற்றும் புலிகள் வேட்டை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்தத் திட்டம் தீர்வாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி !

Comments Off on நம்பிக்கையை விதைத்தோம்: 100-வது ஒருநாள் வெற்றியை ருசித்த கேப்டன் தோனி !

இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி  100வது வெற்றியை இன்று ருசித்தது ! உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை வீழ்த்தியது. இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி, 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 100 போட்டிகளில் இந்திய அணி  வெற்றி பெற்றுள்ளது. 69 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. மெல்பர்னில் இன்று தோனி தலைமையில் இந்திய அணி கண்டது 100வது வெற்றி ஆகும். இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்கள் […]

Continue reading …

I.A.S., ரவி மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: கர்நாடக பேரவையில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம்

Comments Off on I.A.S., ரவி மரணத்தில் சிபிஐ விசாரணை தேவை: கர்நாடக பேரவையில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம்

ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி பெங்களூருவில் மர்மமான முறையில் இறந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி, கோரமங்களாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். மணல் கொள்ளை, ஊழலுக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்துள்ளது. கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனவே, ரவி மர்மமான முறையில் இறந்தது […]

Continue reading …

‘கன்னியாஸ்திரி பலாத்கார விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்’

Comments Off on ‘கன்னியாஸ்திரி பலாத்கார விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்’

மேற்குவங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ-யிடம் ஒப்படைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடியா மாவட்டம் கங்னாபூரில் உள்ள ஒரு கான்வென்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று 71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. 4 நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் முக்கிய […]

Continue reading …