Home » Archives by category » உலகம்

எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை முறியடித்த ஈரான்!

நடுக்கடலில் ஈரானின் எண்ணெய் கப்பல் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதலை ஈரான் கடற்படை முறியடித்துள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு ஒரு முக்கிய நீர்வழி பாதையாக திகழும் ஏடன் வளைகுடாவிலே இச்சம்பவம் நடந்துள்ளது. ஏடன் வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்து ஈரானின் எண்ணெய் கப்பலை, ஐந்து அதிவேக படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து, ஈரான் கடற்படையிடமிருந்து சரமாரியான துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்ட கடற்கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஏடன் வளைகுடாவில் ஈரான் கப்பல் குறிவைக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆகஸ்ட் […]

இந்திய யோகா சங்கத்தின் தலைவராக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தேர்வு!

Comments Off on இந்திய யோகா சங்கத்தின் தலைவராக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தேர்வு!

இந்திய யோகா சங்கத்தின் நிர்வாகக் குழு, இச் சங்கத்தின் உச்ச அமைப்பாகும். இதில் காயத்ரி பரிவாரின் டாக்டர் பிரணவ் பாண்டியா, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனராகிய சத்குரு ஜக்கி வாசுதேவ், சாந்தா குரூஸ் யோகா நிறுவனத்தின் டாக்டர் ஹன்சா யோகேந்திரா, ரிஷிகேஷ் பரமார்த்   நிகேதனின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, கைவல்யதாமா யோகா நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள எஸ். ஓபி திவாரி, சஹாஜ் மார்க்கின் கமலேஷ் பட்டேல், மோக்ஷயாதன் யோக சன்ஸ்தானின் சுவாமி பாரத் பூஷன் மற்றும் மொரார்ஜி […]

Continue reading …

ஜப்பான் பிரதமராக அக் 4ம் தேதி புமியோ கிஷிடா பதவியேற்பு

Comments Off on ஜப்பான் பிரதமராக அக் 4ம் தேதி புமியோ கிஷிடா பதவியேற்பு

டோக்கியோ, செப் 30: ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக, புமியோ கிஷிடா, வரும் அக்டோபர் 4ம் தேதி பதவி ஏற்க உள்ளார். ஜப்பான் நாட்டின் பிரதமராக சுகா பதவி வகித்து வந்தார். மக்கள் மத்தியில், கொரோனா வைரசை கையாண்ட விதத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதன் விளைவாக, அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பொறுப்புக்கு பிறகு அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜப்பானில் […]

Continue reading …

மீண்டும் ஏவுகணை சோதனை: வட கொரியாவால் பதற்றம்

Comments Off on மீண்டும் ஏவுகணை சோதனை: வட கொரியாவால் பதற்றம்

சியோல், செப் 29: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, வட கொரியா நேற்று சோதித்ததால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து வந்தது. பின், 2018ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் இடையில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, வடகொரியாவின் நிலை […]

Continue reading …

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி

Comments Off on குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி

வாஷிங்டன், செப் 25: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்புக்குப் பின், குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நேற்று நடந்தது. அதிபரின் வெள்ளை மாளிகையில் நடந்த அந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுபடுத்துவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் […]

Continue reading …

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு

Comments Off on அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன், செப் 24: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை இன்று சந்தித்துப் பேசினார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். பின் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை அவர் சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் – பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில், இருதரப்பு […]

Continue reading …

விமானத்தில் நேரத்தை வீணாக்காத பிரதமர் மோடி

Comments Off on விமானத்தில் நேரத்தை வீணாக்காத பிரதமர் மோடி

வாஷிங்டன், செப் 23: அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி, நேரத்தை வீணடிக்காமல், அரசு கோப்புகளை படித்துப் பார்த்து கையெழுத்திடும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில், நம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, தலைநகர் டெல்லியில் இருந்து விவிஐபிக்களுக்கான ஏர் இந்தியா ஒன் விமானம் மூலம், நேற்று காலை புறப்பட்டார். விமானத்தில் பயணித்த பிரதமர், […]

Continue reading …

அமெரிக்க அதிபர், துணை அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி

Comments Off on அமெரிக்க அதிபர், துணை அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி

வாஷிங்டன், செப் 22: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில், வரும் 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார். இந்த பயணம் குறித்து, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்: அமெரிக்க […]

Continue reading …

கனடா பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகும் ட்ரூடோ

Comments Off on கனடா பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் பிரதமராகும் ட்ரூடோ

ஒட்டாவா, செப் 22: கனடாவில், பாராளுமன்ற தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார். கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை. எனினும், அந்த தேர்தலில் லிபரல் கட்சி 155 […]

Continue reading …

13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு !

Comments Off on 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு !

2021 ஆண்டின் 13 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. அந்த வகையில், செப்டம்பர் 9, 2021 அன்று நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் வழியாக தலைமையேற்று நடத்துகிறார். இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெயிர் போல்சொனாரோ, ரஷிய அதிபர் மேதகு விளாடிமிர் புதின், சீன அதிபர் மேதகு ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், திரு. அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு. மார்கோஸ் ட்ராய்ஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் சார்பு தலைவர் திரு. ஓங்கார் […]

Continue reading …
Page 1 of 19123Next ›Last »