நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன முக்கிய தலைவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக பகை நிலவி வருகிறது. கடன் அவ்வப்போது போரிட்டு வருகிறது. கடந்த வாரம் பாலஷ்தீன உண்ணாவிரத போராட்ட நடத்தி வந்த பிரபலம் காதர் அட்னன் மரணமடைந்தார். இதையடுத்து. அந்த நாட்டிலிருந்து, இஸ்ரேல் நாட்டை நோக்கி ராணுவம் ஏவுகணை […]
Continue reading …பெண் இன்ஜினியர் உள்ளிட்ட 8 பேர் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகி உள்ளனர். சமீப காலமாகவே அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், கேளிக்கை விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் மாகாணத்தில் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், மவுரிஹோ ஹர்சியா (33) என்ற நபர் நடத்திய, இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதுகுறித்து […]
Continue reading …இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீராக தாண்டன் அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாரகவும் உள்ள நிலையில், தற்போது, உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நம் நாட்டின் பொருளாதார இயக்கம், இன சமத்துவம், சுகாதாரம், குடியேற்றம், கல்வி ஆகிய […]
Continue reading …உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதியை, தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய நாடு கடந்த ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மரணமடைந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்து வருகின்றன இதனால், உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் அதிபர் புதினை கொல்ல உக்ரைன் டிரோன் அனுப்பியது. இதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. துருக்கி தலைநகர் […]
Continue reading …காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இன்று காலையில் ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பிற்காக ரஜோரி மாவட்டத்தில், இணைய […]
Continue reading …இனிமேல் கூகுள் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்ட் தேவையில்லை என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் அக்கவுண்ட், ஜிமெயில் உள்பட்டவைகளுக்கு பாஸ்வேர்ட் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் கூகுள் அக்கவுண்டுகளுக்கு பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிங்கர் பிரிண்ட், பேஸ் அன்லாக், ஸ்கிரீன் லாக் போன்ற வசதிகளைக் கொண்டே கூகுள் அக்கவுண்ட்களை இயக்க முடியும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் பாஸ்வேர்ட், டூ ஸ்டெப் வெரிபிகேஷன் போன்ற முந்தைய வழிகளிலும் கூகுள் […]
Continue reading …ரஷ்ய அதிபர் மாளிகையின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி வரும் நிலையில் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்த டிரோன்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ரஷ்ய ராணுவம் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது. […]
Continue reading …கடந்த ஆண்டு ரஷ்யா நாடு, உக்ரைன் மீது போரை துவங்கியது. இப்போரிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், ரஷ்யா எதையும் பொருட்படுத்தவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளும் நேட்டோ கூட்டமைப்புகளும் நிதியுதவி மற்றும் ஆயுதவுதவி செய்து வருகின்றன. இதனால், உக்ரைன், ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் சுமார் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், 80 பேர் இப்போரில் […]
Continue reading …இன்று அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலையிலுள்ள பார்மர்ஸ்வில்லில் நகருக்கு இல்லினாய்ஸ் மகாணத்தில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போத், இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெடுஞ்சாலையில் பரவியது. இதில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரி, கார்கள், பஸ்கள் என நூறுக்கணக்கான வாகனங்கள் மோதியதில் இரண்டு லாரிகளில் […]
Continue reading …துருக்கி அதிபர் ஏரோடகன் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைன் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளார். இன்று துருக்கியில் செய்தியாளர்களை சந்தித்து அதிபர் ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹுசைனை கண்காணித்து வந்ததாகவும் நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். தீவிரவாத இயக்கங்கள் மீது பாரபட்ச முறையில் தொடர்ந்து தாக்குதல் தொடரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். துருக்கியில் இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Continue reading …