புது டெல்லி,மே 11 உலக அளவிலான பெரும் தொற்றான கோவிட்-19 நோய் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற இந்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கேசரி என்ற கப்பல், மாலத்தீவு, மொரீஷியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர், காமராஸ் ஆகிய நாடுகளுக்கு உணவுப்பொருள்கள், ஹைட்ரோகுளோரிக்வின் மாத்திரைகள் உட்பட, கோவிட்-19 தொடர்பான மருந்துகள், சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக் குழுக்களுடன் 2020, மே10 அன்று புறப்பட்டுச் சென்றது. மிஷன் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உதவித் திட்டம், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், நோயின் பாதிப்பினால் ஏற்பட்ட சிரமங்களுக்கும், இந்த மண்டலத்தில், […]
Continue reading …சென்னை, ஏப்ரல் 30 கொரோனா நோய் தாக்கத்திற்குப் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழ் நாட்டிற்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு முதலமைச்சர் உத்தரவு. தமிழ்நாட்டில் வேளாண்மை, தொழில் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரச் செயல்பாடுகளை கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்திற்குப் பின்பு மீண்டும் முன்பு போலவே துடிப்புடன் இயங்க வைப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியுடன் உள்ளது. உலகப் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 29 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். கொரோனா வைரஸ் தாக்குதலின் விளைவாக இன்று உலக அளவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய அளவில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, பொருட்கள் கிடைப்பதை தொடர்ந்து நிலைநிறுத்துவது, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடா நாட்டில் தற்போது வசித்து வரும் இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக இந்திய […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 24 பிரதமர் நரேந்திர மோடி நேற்று (23/04/2020) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். இரண்டு தலைவர்களும் கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். பெருந்தொற்றுக்கு எதிராக தங்களது நாடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அத்தொற்று ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை எதிர்கொண்டு அதனைச் சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்களை இருவரும் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 20 மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிஹ் உடன், பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். தங்களது நாடுகளில் தற்போதைய கொவிட்-19 பாதிப்பு நிலைமைகளைப் பற்றி இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு முறைகள் நன்றாக அமல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர். மாலத்தீவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட இந்திய மருத்துவக் குழுவும், இந்தியாவால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளும், தீவுகளில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றியதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார். மாலத்தீவைப் போன்ற சுற்றுலாவை சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் தொற்று விடுத்துள்ள கடினமான சவால்களைப் பற்றி பேசிய பிரதமர், கொவிட்-19இன் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்க இந்தியாவின் ஆதரவு தொடருமென மாலத்தீவு அதிபருக்கு உறுதி அளித்தர். தற்போதைய சுகாதார சிக்கல்களால் ஏற்படும் பிரச்சினைகள் […]
Continue reading …புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் பூட்டான் பிரதமர் மாண்புமிகு டாக்டர் லோட்டாய் ட்ஷெரிங் உடன் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்த்தொற்றை அடுத்து இந்தப் பிராந்தியத்தில் உள்ள நிலைமை குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர். இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். பூட்டானில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பூட்டான் மன்னரும், டாக்டர் ட்ஷெரிங்கும் முன்னின்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் […]
Continue reading …புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒளியுடன் நேற்று தொலைபேசி மூலம் உரையாடினார். கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையில், இரு நாட்டு மக்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கொரோனோ தொற்றுக்கு எதிராக தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விவாதித்தனர். நேபாளத்தில் பிரதமர் ஒளியின் தலைமையின் கீழ் இயங்கும் அரசு மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை […]
Continue reading …புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி உகாண்டா அதிபர் யோவேரி காகுட்டா முசேவேனியுடன் இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்த் தொற்றை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சுகாதாரத் துறை சவால்கள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். இப்போதைய சுகாதார நெருக்கடி நேரத்தில் தனது ஆப்பிரிக்க நண்பர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்று உகாண்டா அதிபர் முசேவேனியிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். உகாண்டாவில் இந்த நோய் பரவாமல் தடுப்பதில், அந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு […]
Continue reading …உலகையே அசுருத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தோற்றுக்கு அமெரிக்காவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட நாங்கள் ஆர்டர் செய்த சில மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் […]
Continue reading …புதுடெல்லி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல் இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியனில் இருந்து வரும் உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பாதுகாக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படலமானது காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை […]
Continue reading …