தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அரிய வகை விலங்குகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இப்பகுதியில் அடிக்கடி சட்ட விரோதமாக விலங்குகளை வேட்டையாடுதல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேனி வனச்சரக வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் சட்ட விரோதமாக வேட்டையாடுவர்களை பற்றி விவரங்கள் சேகரித்து வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை போடி அருகில் உள்ள உலக்குருட்டி சாலை பகுதியில் வெடி […]
அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். இது அவரது கட்சியினரிடத்தில் மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இருவருக்குமிடையே போட்டிகள் இருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் […]
Continue reading …பணி நேரத்தில் இல்லாத அரசாங்க அதிகாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வில் ஈடுபட்டு பணியில் இல்லாத அரசாங்க ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இத்தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவ்வகையில் ராணிப்பேட்டை கூட்ரோட்டில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அக்குழந்தைகள் நல மையத்தில் உள்ள அதிகாரி பணியில் இல்லாததால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் […]
Continue reading …செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்த போட்டியில் செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் இந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி […]
Continue reading …தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைத்தலைமைக்கான பிரச்னை உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியிருப்பதாக ஈபிஎஸ் தனது மனுவில் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஈபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை கோரியிருப்பதாக ஈபிஎஸ் தமது மனுவில் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த அலுவலகத்தில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களும் உள்ளன. இக்கட்டிடம் ரூ.110 கோடியில் 7 அடுக்கு மாடித் தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
Continue reading …சொகுசு பஸ் ஒன்று தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொகுசு பஸ் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு நேற்று இரவு புறப்பட்டு ஒட்டாப்பிடாரம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பஸ்ஸின் முன்புறத்திலிருந்து புகை அதிக அளவில் வெளிவரத் தொடங்கி உள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறங்குமாறு கூறியுள்ளார். பீதியடைந்த பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு […]
Continue reading …தமிழகம் முழுதும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க இனி முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலகங்களில் பணிக்கு வருபவர்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில காலமாக மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]
Continue reading …பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருப்பவர் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா நோய் தொற்றால் […]
Continue reading …அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கேபி முனுசாமி அறிவித்தார். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்ளிட்ட புது தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் 23 தீர்மானங்கள் ரத்து செய்ததாக இன்று […]
Continue reading …