தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிததத்தில், “சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரா தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1, அன்று […]
Continue reading …கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு – கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டு , கருப்புக் கொடி கட்டி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் 2 கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் மேலும் இப்பகுதியில் புதியதாக கல்குவாரி அமைக்க கூடாது என்றும், ஏற்கனவே செயல்பட்டு […]
Continue reading …53 உடல்களை தானமாக பெற்று மதுரை அரசு மருத்துவமனை சாதனை. மதுரை அரசு மருத்துவமனையில் 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரை 53 உடல்கள் தானமாக பெறப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நிலைய அலுவலர் டாக்டர் சரவணன் கூறுகையில், ‘உடல் தானம் செய்தவர்கள், ஆதரவற்ற நிலையில் இறப்போர் என்று கடந்த ஆண்டில் 53 உடல்கள் பெறப்பட்டன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு படிப்புக்காக 20 உடல்கள் ஆண்டுதோறும் தேவைப்படும். மற்றவற்றை புதிய கல்லுாரிகளுக்கு அனுப்பி விடுகிறோம்” […]
Continue reading …கோயில் யானையை காணோம், ஆட்சியரிடம் மனு. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள புனுகு கருப்பணசாமி கோயிலுக்கு சொந்தமான “ரெடி லெட்சுமி ” என்னும் யானையை, தனிநபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல், சிதம்பரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு விற்று விட்டதாக கூறி, நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (2.7) மனு அளிக்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
Continue reading …தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண சம்பவத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. […]
Continue reading …பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் திராவிட மாடலில் கிக் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள், நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம் அவர், “சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள் […]
Continue reading …உலக மருத்துவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. என்பதும் அன்றைய தினம் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்து செய்தியில், “உலகின் ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான் அவர்களின் சேவை போற்றப்பட வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு அடுத்தபடியாக உன்னத சேவை செய்பவர்கள் மருத்துவர்கள் தான். உலகின் ஆக்கும் சக்தி […]
Continue reading …தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை அண்ணா பல்கலைக்கழக நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. நாளை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் இந்த விழாவை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை பல்கலைக்கழக வேந்தர் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து. மேலும் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 […]
Continue reading …நீதிமன்றம் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது. ஆனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி […]
Continue reading …