அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு வனத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீர்வளத்துறை […]
Continue reading …செந்தில் பாலாஜி தரப்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து ஒரு வருடத்திற்கு மேல் […]
Continue reading …மேலூர் மேலவளவு தியாகிகளின் 27ம் ஆண்டு நினைவு நாள், தியாகிகள் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநில குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே பொன்னுத்தாய், மேலூர் தாலுகா செயலாளர் எம். கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Continue reading …பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா. மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி ஜூன் மாதம் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஓய்வு பெறும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையை பாராட்டி, மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் அவர்கள், அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
Continue reading …*எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவு; 7 தனிப்படைகள் அமைப்பு* நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருக்கிறார் எனக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க முன்பு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இப்போது கூடிதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Continue reading …தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றடைந்தார் விஜய்! போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் அரங்கிற்கு முன்பாகவே சென்றுள்ளார். சென்னை திருவான்மையூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Continue reading …மதுரை மக்களவைத் தேர்தலில் 328 வாக்குச்சாவடிகளில் பாஜக முதலிடம். மதுரை லோக்சபா தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கே. பி. ராமலிங்கம், ” மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக 2வது இடம் பெற்றுள்ளது. எதிர்பாராத வகையில் 328 ஓட்டுச் சாவடிகளில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. மதுரை அதிமுக, கோட்டை என்பதை தாண்டி, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என கட்சி எடுத்த முடிவுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று கூறினார்.
Continue reading …செங்குண்டு அய்யனார் திருவிழா. சுடு பானையில் கறிவிருந்து சமைத்து பரிமாறல். மேலுார், : அரிட்டாபட்டியில் செங்குண்டு அய்யனார் ஆனிமாத புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் பக்தர்கள் புரவிகளை வெள்ளச்சி ஆயி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர். நேற்று அரிட்டாபட்டியில் உள்ள மழட்டழகி தர்மம் என்னும் குளத்தில் பெண்கள் புதிய மண்பானையில் தீர்த்தம் எடுத்து வந்து வெள்ளச்சிஆயி அம்மன் கோயில் முன்பு 300க்கும் மேற்பட்ட கோழிகளை வெட்டி பொங்கல் வைத்தனர். பிறகு […]
Continue reading …முழு கொள்ளளவை எட்டிய ஆத்தூர் டேம். திண்டுக்கல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால், திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கம் , அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை அடுத்து மறுகால் ஓடி உபரி நீர் குடகனாற்றில் வரத் தொடங்கியுள்ளது.
Continue reading …திண்டுக்கல்லில் டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர் கைது. திண்டுக்கல்லில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில், திண்டுக்கல் நந்தவனப்பட்டி, விஜய் நகர் அருகே டூ வீலரில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற லோகநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 400 கிலோ, ரேஷன் அரிசி மற்றும் டூவீலர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Continue reading …