திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவா, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வரும் ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி முதல் தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக கூட்டணியில் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் […]
Continue reading …தமிழிசை சௌந்தராஜன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பதாக புகார் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் செயல்பாட்டுக்கு தமிழிசை பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார். அடுத்த சில நாட்களில் ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அமித்ஷா கண்டித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிசைக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளதால் நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார். அண்ணாமலை, “பள்ளிக்கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது, பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை” என்று தெரிவித்துள்ளார். நீதியரசர் சந்துரு, அரசுப் பள்ளிகளின் […]
Continue reading …நேற்று கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தியவர்கள் பலர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தற்போது வரையிலும் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றது. நேற்று அங்கு சாராயம் குடித்த 6 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து மேலும் சாராயம் குடித்த 80க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
Continue reading …ஒரே இடத்தில் நான்கு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த போது அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து அந்த சிறுமிகளை காப்பாற்றி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் 18 வயது நிரம்பாத நான்கு சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நான்கு சிறுமிகளின் பெற்றோரிடம் அறிவுரை வழங்கி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் […]
Continue reading …தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி வரவிருந்ததாகவும் சென்னையிலிருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக துணை தலைவர் கரு நாகராஜன், “நிர்வாக காரணங்களுக்காக […]
Continue reading …குரங்கு ஒன்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 24 நாள் குழந்தையை கடித்து குதறி உள்ளது. கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் என்ற பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 24 நாட்கள் மட்டுமே ஆன இந்த குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டிருந்துள்ளது. வினோதினி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று திடீரென தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறிவிட்டு ஓடிவிட்டது. இதையடுத்து குழந்தை உயிருக்காக போராடிய […]
Continue reading …தாத்தாவே மூட நம்பிக்கை காரணமாக பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை கொன்றுள்ளார். மக்கள் மத்தியில் மூடநம்பிக்கை இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தை பிறக்கும்போது கூட நல்ல நேரம் பார்த்துதான் பிரசவம் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் தாத்தா வீரமுத்து. குழந்தை பிறந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை சித்திரை […]
Continue reading …கள்ளக்காதல் தொடர்பை துண்டித்துக் கொண்ட பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில், அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். உயிருக்கு பயந்து அந்த பெண் ஓட முயற்சித்த போது, அந்த வாலிபர் விடாமல் துரத்திச் சென்று […]
Continue reading …