Home » Archives by category » தமிழகம் (Page 351)

ராஜீவ் கொலை வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 15-ல் விசாரணை !

Comments Off on ராஜீவ் கொலை வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 15-ல் விசாரணை !

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜூலை 15-ல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக […]

Continue reading …

ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?- டி.ராஜேந்தர் விளக்கம் !

Comments Off on ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?- டி.ராஜேந்தர் விளக்கம் !

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் அரசியல் ஆதாயத்துக்காக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததில்லை. இதற்கு முந்தைய காலக்கட்டங்களில்கூட அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அவை எல்லாம், அரசியல் ஆதாயத்துக்காக அல்ல. அதிமுக கேட்டுக் கொண்டதால் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறேன். […]

Continue reading …

ஜெயலலிதா விடுதலை தீர்ப்பு முழு விவரம்!

Comments Off on ஜெயலலிதா விடுதலை தீர்ப்பு முழு விவரம்!

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார். விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் […]

Continue reading …

ஆந்திர அரசின் காட்டுமிராண்டித்தனம் ! 20 ஏழைகளை சுட்டுப் பொசுக்கிய கொடுமை!

Comments Off on ஆந்திர அரசின் காட்டுமிராண்டித்தனம் ! 20 ஏழைகளை சுட்டுப் பொசுக்கிய கொடுமை!

செம்மரம் கடத்தும் தொழிலில், சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவியான தொழிலாளர்களை மரம் வெட்டும் கூலிகளாக பயன்படுத்தப்படுகின்றனர்! செம்மரங்கள் மருத்துவ குணம் கொண்டவை என்றும், செக்ஸ் குறைபாடுகளை நீக்கும் ‘வயாக்கரா’ மருந்து தயாரிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது! ஆந்திர மாநிலம் & திருப்பதியை ஒட்டிய மலையடிவாரப் பகுதியிலிருந்து வெட்டி கடத்தப்படும் மரங்கள், குறிப்பாக சீனா, ஜப்பான், மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு, கடும் […]

Continue reading …

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் !

Comments Off on தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் !

தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கடந்த பிப்ரவரி 17-ம் […]

Continue reading …

முடிந்தது ‘லிங்கா’ பிரச்சினை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

Comments Off on முடிந்தது ‘லிங்கா’ பிரச்சினை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !

ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தையொட்டி, விநியோகஸ்தர்கள் கிளப்பிய பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்த நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் டிசம்பர் மாதம் வெளியான ‘லிங்கா’. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததோடு பல விநியோகஸ்தர்கள் பெருமளவில் நஷ்டம் அடைந்ததாக பிரச்சினை கிளம்பியது. இதைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில், உண்ணாவிரதப் போராட்டம், பத்திரிக்கையாளர் சந்திப்பு என பிரச்சினை நீள, தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையில் லிங்கா குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் […]

Continue reading …

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கல்யாணியை நியமித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

Comments Off on மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கல்யாணியை நியமித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என்றும் உத்தர விட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி மதுரை காம ராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இவரது நிய மனத்தை எதிர்த்து பேராசிரியர் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கல்யாணி நியமனத்துக்கு தடை விதித்தது. […]

Continue reading …

தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம் !

Comments Off on தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம் !

அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளதாக கூறுகிறார்கள். டெல்லி பா.ஜ.க. தலைவர்களை ஆணவத்தால் ஒதுக்கிய பா.ஜ.க. தலைமையின் அடிவருடிகளை தற்போது துடைப்பத்தால் பா.ஜ.க.வை அள்ளிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி திகைக்க வைத்துள்ளதாம். பீகாரில் துதிபாடிகளின் ஆலோசனையை கேட்டு, நீக்கப்பட்ட முதல்வருக்கு ஆதரவு தர சம்மதித்த பா.ஜ.க., பிறகு ஜகா வாங்கி கைவிட்டது. அதேபோல் மேற்கு வங்கத்தில் தேவையற்ற நிலையில் மம்தாவை உசுப்பேற்றி, தற்போது தன் […]

Continue reading …

ஜெ. முதல்வராக சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி !

Comments Off on ஜெ. முதல்வராக சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி !

சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே  சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி  அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பால்குடம் எடுத்தல், மண் சோறு சாப்பிடுதல், அலகு குத்தி தேர் இழுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் என பலவிதமான வேண்டுதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில்  தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு வேண்டுதலில் […]

Continue reading …

கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற வலியுறுத்தல்: தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் !

Comments Off on கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற வலியுறுத்தல்: தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் !

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையில் உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியில் விரைவில் சேவைகள் தொடங்கப்படுவது உள்ளிட்ட சில அறிவிப்புகள் தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றன. தமிழக அரசின் செயல்பாடுகள் வெகுவாக பாராட்டப்பட்ட இந்த உரையில், தமிழக மீனவர் பிரச்சினை, அகதிகள் விவகாரம், நதிநீர் சிக்கல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் மாநில அரசின் நிலைப்பாடுகள் இடம்பெற்றன. 2015-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இதில் ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் […]

Continue reading …