Home » Archives by category » தமிழகம் (Page 356)

மனைவி டைரக்ஷனில் நடிக்க தனுஷ் மறுப்பு!

Comments Off on மனைவி டைரக்ஷனில் நடிக்க தனுஷ் மறுப்பு!

நடிகைகள் விஷயத்தில் ரொம்பவும் கொடுத்துவைத்தவர் தனுஷ். கமலஹாசன் மகள் சுருதியுடன் ஜோடி சேர்ந்து கிளுகிளுப்பூட்டிய தனுஷ் அடுத்து இன்னொரு மகள் அக்சராவுடன் ஷமிதா என்ற இந்திப்படத்தில் ஜோடி சேர்ந்து அசத்திவருகிறார். “இனிமேல் என் மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அவர் படங்களை தயாரிப்பேன்…” என்ற தனுஷிடம் ஏன் இப்படி? என்று கேட்டதும் “அதுதான் எனக்கு நல்லது” என்று படக்கென்று சொன்னார்.

Continue reading …

தமிழக வளர்ச்சிக்கு செவிசாய்க்குமா பா.ஜ.க.!

Comments Off on தமிழக வளர்ச்சிக்கு செவிசாய்க்குமா பா.ஜ.க.!

இந்திய கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை அலச ஆரம்பித்து அதிர்ந்து போயுள்ளன. மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஏமாற்றிய காங்கிரஸ் கட்சி, அந்த மக்கள் தங்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றியது குறித்து அதிர்ந்துபோயுள்ளது. உத்திரபிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் இந்துக்களே வெற்றிபெற்றது உலக அதிசயம். ராகுல்காந்தி ஆதரவாளர்கள் உத்திரபிரதேசத்தில் முஸ்லீம்களை வளைத்துப்பிடிக்க, அவர்கள் வளைந்து, நெளிந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்து காங்கிரசுக்கு ஆப்பு அடித்துள்ளனர். நந்தவனத்து ஆண்டி கூத்தாடி உடைத்தாண்டி கதையாக காங்கிரஸ் மக்கள் ஆதரவை இழந்து […]

Continue reading …

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.!

Comments Off on சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க.!

முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி (சட்டப்படியான) முயற்சியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உறுதியாகிவிட்டதாக தலைநகரில் கூறுகிறார்கள். தமிழ் குலத்திற்கு துரோகம் செய்ய நினைத்த எட்டப்பர்களையும் மாற்றுமொழி பேசி தமிழ்நாட்டில் வசிக்கும் சுயநல அரசியல்வாதிகளையும் தமிழ்தாய் புறக்கணித்து விட்டாள். அதிர்ந்துபோன கர்நாடக சுயநல அரசியல்வாதிகள், தற்போது புதிய திடடத்தை நடைமுறை படுத்த உள்ளதாக கர்நாடக வட்டாரங்கள் கூறுகின்றன. 192 டி.எம்.சி. அளவில் பெரும்பான்மைக்கு சிறிது குறைத்து மைசூர் அருகே உள்ள பிலிகுண்டு மூலம் தண்ணீர் திறந்து விடப்படும். மீதமுள்ள […]

Continue reading …

ஏ.ஆர்.முருகதாஸ் – பி.மதன் மான்கராத்தே சண்டை!

Comments Off on ஏ.ஆர்.முருகதாஸ் – பி.மதன் மான்கராத்தே சண்டை!

‘மான் கராத்தே’ படத்தை ஏ.ஆர்.முருகதாசும் பி.மதனும் இணைந்து தயாரித்தனர். படமும் சுமாராகப்போனது. படத்தின் லாபத்தைப் பங்கு போடுவதில் இருவருக்கிடையே பெரும் மோதல். முருகதாஸ் உதவியாளர் படத்தின் இயக்குநர் திருக்குமரன். இவர் சொன்னதைவிட 3 கோடி ரூபாய் அதிகமாய் செலவிட்டதால் அதை முருகதாஸ் தரவேண்டும் என்கிறார் பி.மதன். இதனாலே இருவருக்கிடையே மோதல் வெடித்தது. இதனால் நடந்த சமரசம் தோல்வியில் முடிந்ததால் விவகாரம் நீதிமன்றத்துக்கு போவதாய்த்தெரிகிறது. படத்தின் காட்சிகள் பற்றியும் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது.

Continue reading …

தமிழக பி.ஜே.பி.யில் அந்தணர்கள் ஆதிக்கம்!

Comments Off on தமிழக பி.ஜே.பி.யில் அந்தணர்கள் ஆதிக்கம்!

இந்திய அரசியல் புதிய வாழ்க்கையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளது. மதசார்பற்ற போர்வையில் குளிர்காய்ந்து அரசியல் நடத்தி இந்திய தாய்க்கு அடிமை விலங்கிட்ட சுயநல அரசியல்வாதிகளை இந்திய மக்கள் விரட்டிய 3வது சுதந்திர போர் நடைபெற்று உள்ளது. இந்திய உணர்வு உள்ள பிரதமர் பதவி ஏற்றது இந்திய தாய்க்கு மக்கள் அளித்த நன்றிக்கடன். வாஜ்பாய் ஆட்சி இந்தியாவின் பொற்காலமாக திகழ்ந்தது. அப்போது இந்தியாவை திட்டமிட்டு அடிமைப்படுத்த தீட்டிய சதியில் சிக்கிய பா.ஜ.க. அரசியல்வாதிகள், தற்போதும் இந்த ஆட்சியில் […]

Continue reading …

தொழில் அதிபருடன் சுவாதி ரகசிய திருமணம்!

Comments Off on தொழில் அதிபருடன் சுவாதி ரகசிய திருமணம்!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் கதாநாயகி ஸ்வாதி சென்னையில் உள்ள ஒரு தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்து கொள்வதாக பேசப்பட்டது. ‘வடகறி’ படத்தில் இப்போது ஸ்வாதி நடித்துக்கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமே என் தொழில். காதலைப் பற்றியோ திருமணத்தை பற்றியோ சிந்தித்தது கூட இல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாதி.

Continue reading …

ஜோதிடர் ஷெல்வி கணிப்பு வென்றது!

Comments Off on ஜோதிடர் ஷெல்வி கணிப்பு வென்றது!

*புகழ்பெற்ற ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வியின் இயற்பெயர் : தாமோதரன். இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்! தமிழ்நாட்டில் பி.ஜே.பி. கூட்டணிக்கு விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வை கொண்டுவந்தவர், இவர்தான்! தே.மு.தி.க.வின் அதிகாரப்பற்றற்ற தலைவரான பிரேமலதாவுக்கு, இவர்தான் ஆஸ்தான ஜோதிடர்! இத்னைப் பெருமைகளுக்கு உரிய ஜோதிடர் ஷெல்லிதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 34 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் நம்மிடம் சொன்னார்! அந்தத் தகவலை 4.4.2014 ல் வெளியான ‘நெற்றிக்கண்’ இதழில் பதிவு செய்திருந்தோம்! * அ.தி.மு.க. 37 தொகுதிகளில் (3+7=10) வெற்றி […]

Continue reading …

முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியும் காணாமல்போன தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!

Comments Off on முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியும் காணாமல்போன தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!

பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், தெளிவாக அமைந்துவிட்டது! * இந்தியாவுக்கு மோடி! * தமிழ்நாட்டுக்கு அம்மா! முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியின் காரணமாக, தி.மு.க.வும் காங்கிரசும் காணாமல் போய்விட்டன! தவிடுபொடியாகிவிட்டன! * இந்திய அளவில் அ.தி.மு.க. 3&வது இடத்தைப் பிடித்துள்ளது! இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது! நான்காவது இடத்தை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிடித்துள்ளது! * முதல்வர் அம்மா, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இந்திய அரசியல் அரங்கத்தில் பளிச்சிடுகிறார்! * வரலாறுகளை உடைத்து & புதிய […]

Continue reading …

இமாலய சாதனை!

Comments Off on இமாலய சாதனை!

இதழியல் புலனாய்வில் இருபது ஆண்டுகள்… எல்லோரும் வியக்கும் இமாலய சாதனை! ஏ.எஸ். மணியென்னும் இரும்பு மனிதனின் இரத்தமும், வியர்வையும் கலந்த கலவை மொழியிது! அடக்க நினைத்த ஆட்சியாளர்கள் அடிக்க துடித்த அரசியலாளர்கள் முடக்க விரைந்த கெடுமதியாளர்கள் மூர்க்கம் நிகழ்த்திய கொடுங்கோலர்கள்! கைது, வழக்கு, சிறைகள்… கர்ண -கொடூர சித்ரவதைகள் காலாபானி சிறையில் நடந்தவை கண்முன் நடந்த காலக்கொடுமை! சதிவலைகளின் சாகச சிரிப்பில் உரிமையாளர் கைது ஓகே… உறவுகள் சுமந்த கொடுமைகள் கண்டு இரும்பு விலங்கும் இளகி அழுததே! […]

Continue reading …

20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்!

Comments Off on 20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்!

20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்! நவீன நெற்றிக்கண் வார இதழ், 1995 ஏப்ரல் 5ம் தேதி துவக்கப்பட்டது! பத்தொன்பது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 20வது ஆண்டில்… *வாசகர்கள்… *முகவர்கள்… *செய்தியாளர்கள் நண்பர்கள் மற்றும் நெற்றிக்கண் குடும்பத்தாரின் ஆணி வேர்கள் துணையோடு அடியெடுத்து வைக்கிறது! நெருப்பாற்றில் நீந்தும் எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி! ஏ.எஸ். மணி ஆசிரியர் & வெளியீட்டாளர்.

Continue reading …