Home » Archives by category » அரசியல் (Page 11)

தனியார் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு பாராட்டு விழா!

Comments Off on தனியார் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு சார்பில் தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில், “2023&-2024ம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 2199 தனியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளும், 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 1750 தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், தனியார் பள்ளிகளை […]

Continue reading …

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது

Comments Off on கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது

கள்ளச்சாராய மரண விவகார வழக்கில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட ட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். 11 பேரையும் […]

Continue reading …

மீண்டும் 13 தமிழக மீனவர்கள் கைது

Comments Off on மீண்டும் 13 தமிழக மீனவர்கள் கைது

அடிக்கடி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தற்போது மீண்டும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தும் கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது. தமிழக முதலமைச்சர் பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குகடிதம் […]

Continue reading …

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை!

Comments Off on எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை!

சிபிசிஐடி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர் வீட்டில் விசாரணை செய்து வருகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் நூறு கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய முன் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அவரது தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருக்கமான சிலருடைய வீட்டில் சமீபத்தில் சோதனை நடந்தது. […]

Continue reading …

சாட்டை துரைமுருகன் கைதா?

Comments Off on சாட்டை துரைமுருகன் கைதா?

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சற்றுமுன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் எழுந்த புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. […]

Continue reading …

திமுக அமைச்சர்களுக்கு கைப்பேசி!

Comments Off on திமுக அமைச்சர்களுக்கு கைப்பேசி!

திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு கைப்பேசிகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா வழங்கினர். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு தொகுப்புகளை தயாரித்து வெளியிடுதல், டுவிட்டர், முகநூல் (பேஸ்புக் ), யூடியூப், ரீல்ஸ், தொடங்குதல், 100 இளைஞர்களுக்கு வலைதள வசதியுடன் கூடிய கைப்பேசி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் குட்டிமணி, தமிழரசன் ஆகியோர் […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியாவில் வரவேற்பு!

Comments Off on பிரதமர் மோடிக்கு ஆஸ்திரியாவில் வரவேற்பு!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். அங்கு அவர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதோடு அதிபர் புதினுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று ஆஸ்திரியா நாட்டிற்கு சென்று உள்ளார். அந்நாட்டில் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, மாஸ்கோவிலிருந்து ஆஸ்திரியாவிற்கு இன்று காலை பிரதமர் மோடி சென்றுள்ளார். அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் […]

Continue reading …

புதுச்சேரி விஷச்சாராய சம்பவத்திற்கு ஈபிஎஸ் கண்டனம்!

Comments Off on புதுச்சேரி விஷச்சாராய சம்பவத்திற்கு ஈபிஎஸ் கண்டனம்!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்தனர். இன்னும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. தற்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு கள்ளச்சாராயம் வந்ததாகவும் அதை குடித்த ஏழு பேர் மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் […]

Continue reading …

கள்ளக்குறிச்சியில் இருந்து பாடம் கற்கவில்லையா? டிடிவியின் கேள்வி!

Comments Off on கள்ளக்குறிச்சியில் இருந்து பாடம் கற்கவில்லையா? டிடிவியின் கேள்வி!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து இன்னும் தமிழக அரசு பாடம் கற்கவில்லையா? என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர், “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட […]

Continue reading …

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்?

Comments Off on அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய வேட்பாளர் ஜோ பைடனுக்கு பதில் போட்டியிட திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இருவரும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதம் செய்த நிலையில் அதில் ஜோபைடன் வாதிட திணறியதாகவும் கூறப்பட்டது. ஜோ பைடனுக்கு வாதிடம் திறன் மோசமாக இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினம் என்றும் எனவே […]

Continue reading …